தூய்மை நகரங்கள் பட்டியலில் அதளபாதாளத்துக்கு சென்ற தமிழகம் : கோவை மாநகரத்துக்கு ஆறுதல் அளித்த போத்தனூர்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 October 2022, 10:43 am

தூய்மை இந்தியா தரவரிசை பட்டியலில் தமிழகத்தின் பெரிய நகரங்கள் ஒரு சில இடங்கள் மட்டுமே முன்னேறி இருந்தாலும் சிறிய நகரங்கள் அனைத்தும் 200 வது இடத்திற்கு மேல் பிடித்துள்ளது.

தூய்மை இந்தியா திட்டத்தில் தூய்மை நகரங்கள் தொடர்பான ஆய்வு 2016ம் ஆண்டு முதல் மத்திய அரசு நடத்தி வருகிறது. ஸ்வச் சர்வேக்ஷன் என்ற பெயரில் நடத்தப்படும் இந்த ஆய்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஆய்வு 75வது சுந்திர தின நிறைவு விழாவை முன்னிட்டு தூய்மை அமிர்தப் பெருவிழாவாக நடத்தப்பட்டது. இதில் 4,354 நகரங்கள் கலந்து கொண்டன. இதற்கான விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் பல்வேறு பிரிவுகளில் 160க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டன.

இதில் 100 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மேல் உள்ள மாநிலங்களின் பட்டியல் தமிழகம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. 13 மாநிலங்கள் உள்ள இந்த பட்டியலில் 1,450 மதிப்பெண்களுடன் தமிழகம் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

இதில் 10 லட்சத்திற்கும் மேல் மக்கள் தொகை உள்ள நகரங்களின் பட்டியில் இந்தூர் முதல் இடத்தையும், சூரத் 2வது இடத்தையும், நவி மும்பை 3வது இடத்தையும் பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் கோவை 42வது இடத்தையும், சென்னை 44வது இடத்தையும், மதுரை, 45 வது இடத்தையும் பிடித்துள்ளது.

2021ம் ஆண்டு தரவரிசை பட்டியலில் சென்னை 43 வது இடத்திலும், கோவை 46 வது இடத்திலும், மதுரை 47 வது இடத்திலும் இருந்தது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு சென்னை ஒரு இடம் பின்தங்கியுள்ளது. கோவை மற்றும் மதுரை ஒரு சில இடங்கள் மட்டுமே முன்னேறி உள்ளது.

10 லட்சம் வரை மக்கள் தொகை உள்ள நகரங்களில் திருப்பதி, மைசூர், புதுதில்லி உள்ளிட்ட நகரங்கள் முதல் 3 இடத்தை பிடித்தன. தமிழகத்தில் சேலம் 221 வது இடத்தையும், தூத்துக்குடி 226 வது இடத்தையும், நாகை 261 வது இடத்தையும், திருச்சி 262 வது இடத்தையும், புதுக்கோட்டை 267 வது இடத்தையும், திருவண்ணாமலை 271 வது இடத்தையும், கும்பகோணம் 287 வயது இடத்தையும், தாம்பரம் 288 வது இடத்தையும், வேலூர் 291 வது இடத்தையும், கடலூர் 291வது இடத்தை பிடித்துள்ளது.

ஆவடி 302 வது இடத்தையும், நெல்லை 308 வது இடத்தையும், திண்டுக்கல் 316 வது இடத்தையும், ஈரோடு 322 வது இடத்தையும், திருப்பூர் 377 வது இடத்தையும், ஆம்பூர் 338 வது இடத்தையும், ராஜபாளையும் 339 வது இடத்தையும், காஞ்சிபுரம் 356 வது இடத்தையும், காரைக்குடி 371 வது இடத்தையும் பிடித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பிரிவுகளில் 160க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டன. இதில் தமிழகம் ஒரு விருதை மட்டுமே பெற்றுள்ளது. தென் மண்டலத்தில் 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை மக்கள் தொகை கொண்ட நகரங்களில் புதிய மற்றும் சிறப்பு முயற்சிகள் பிரிவு கோவை மாவட்டத்தில் போத்தனூர் நகரம் மட்டுமே விருது பெற்றுள்ளது.

  • Nayanthara disrespecting Allu Arjun viral video பிரபல தெலுங்கு நடிகரை அசிங்கப்படுத்திய நயன்தாரா..வைரலாகும் வீடியோ..தனுஷை கொண்டாடும் ரசிகர்கள்..!
  • Views: - 536

    0

    0