தமிழ் ராக்கர்ஸ் அட்மின் கைது;மலையாள தயாரிப்பாளர் புகார்; கொச்சி போலீசார் செய்த தரமான சம்பவம்;

Author: Sudha
28 July 2024, 9:34 am

மலையாள முன்னணி நடிகர் பிரித்விராஜ் நடித்த குருவாயூர் அம்பல நடையில் என்ற மலையாள திரைப்படம் கடந்த மே மாதம் வெளியானது. இந்த திரைப்படம் வெளியான முதல் நாளே தமிழ் ராக்கர்ஸில் பதிவேற்றம் செய்யப்பட்டது.இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்தது.தயாரிப்பாளர் சுப்ரியா மேனன் கொச்சி சைபர் கிரைம் போலீஸில் இது குறித்து புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீஸார் தீவிரமாக குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் என்பவரை ஒரு தியேட்டரில் புதிய படத்தை பதிவு செய்து கொண்டிருந்த போது கொச்சி சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திரையரங்குகளின் இருக்கைகளில் சிறிய அளவிலான கேமராவை வைத்து முழு படத்தையும் ரெக்கார்டு செய்தது தெரியவந்தது. 12 பேர் கொண்ட குழுவாகவும் இவர்கள் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.மேலும் இணையத்தில் படங்களை முதல் நாளிலேயே பதிவேற்றம் செய்ய 5000 ரூபாய் வரை கமிஷனாக ஸ்டீபன் ராஜ் பெற்றதும் தெரியவந்தது. இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணையை மேலும் தீவிரப் படுத்தி உள்ளனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி