பாஜக சொல்லித்தான் பீதி அடையனுமா..? பந்த் எதுக்கு நடத்துவாங்க-னு தெரியாதா..? அமைச்சருக்கு தமிழிசை சவுந்தரராஜன் ரிப்ளை..!!

Author: Babu Lakshmanan
27 October 2022, 8:14 pm

கோவை ; குண்டு வெடித்ததை பா.ஜ.க சொல்லித்தான் பீதி அடையனுமா? என்று தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

எல்லா இடமும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கோவை என்றாலே பரபரப்பு என்ற இல்லாமல் அமைதியாக இருக்க வேண்டும். தீவிரவாதம் எந்த வகையில் தலைதூக்கினாலும் பாரபட்சமின்றி தடுக்க வேண்டும்

கோவையில் பரபரப்பான நிகழ்வுகள் இல்லாமல் இருக்க வேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துதான் ஆக வேண்டும்.தமிழக அரசின் NIA கோரிக்கையினை மத்திய அரசு ஏற்று இருக்கின்றது. ஒரு உத்தரவாதத்தை ஏற்படுத்தும் அளவிற்கு தமிழக அரசு செயல்பட வேண்டும்.

கோவை சம்பவத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்து இருக்கின்றது. ஏன் இப்படி நடந்த்து என்பதை காவல்துறை பார்க்க வேண்டும். NIA மட்டுமல்ல, தமிழ்நாடு காவல் துறையும் கோவை சம்பவத்தில் கவனமுடன் இருந்து இருக்க வேண்டும். கேஸ் சிலிண்டர் என்று மேலோட்டமாக சொன்னார்கள். பின்னர் அது வேறு விதமாக மாறியது. ஒருத்தர் மேல கவனத்தை செலுத்தாமல் முற்றிலும் பாதுகாப்பை கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.

குண்டு வெடித்ததை பா.ஜ.க சொல்லித்தான் பீதி அடையனுமா? மக்கள் எல்லோரும் தொலைக்காட்சி பார்த்து கொண்டு இருக்கின்றனர். இத்தகைய கருத்துகள் வரும் போது எச்சரிக்கையாக இருக்க வாய்ப்பு உள்ளது. பந்த் நடத்துவது என்பது போராட்ட வழிமுறை. இன்னும் எச்சரிக்கையாக இருக்கனும் என்பதற்காக, எதிர்ப்பை தெரிவிக்க நடத்துவது.

கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை. கோவை அமைதியான நிலையில் கடையை அடைத்து எதிர்ப்பு தெரிவிக்கும் முறைதான் பந்த். மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் விருப்பம். அரசியல்வாதிகள் நாகரீகமாக பதிவு செய்ய வேண்டும். ஒரு டிவிட்டர் பதிவு அரசியல் கட்சி தலைவர்கள், அவர்கள் உடன் இருப்பவர்கள் என நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் சரியாக நடைமுறைபடுத்த வேண்டும். கையாளப்பட வேண்டும் என்பது தமிழிசையின் ஆசை, எனக் கூறினார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 447

    0

    0