ஆளுநர் பதவியை ராஜினாமா செய்கிறார் தமிழிசை சௌந்திரராஜன்? நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மும்முரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 March 2024, 4:48 pm

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்கிறார் தமிழிசை சௌந்திரராஜன்? நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மும்முரம்!!

தற்போது தெலங்கானா மாநில ஆளுநராகவும், புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் உள்ளவர் தமிழிசை சௌந்திரராஜன். இவர் தமிழக பாஜக தலைவராக பதிவி வகித்த போது, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அவருக்கு தோல்வியே கிடைத்தது.

இருந்தும் அவரை கைவிடாத பாஜக, ஆளுநர் பதவி கொடுத்து அழக பார்த்தது. ஆளுநராக இருப்பவர் அரசியலில் இருந்து விலகியிருக்க வேண்டும், கட்சி சார்பாக எதுவும் பேசக்குவடாது என விதி உள்ளது.

ஆனால் தமிழிசை, தமிழக அரசு குறித்து திமுக அரசை விமர்சித்து வருகிறார். அரசியலை விட்டு விலக மனமில்லாத தமிழிசை அண்மையில், மக்கள் பிரதிநிதியாக வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அது ஆண்டவனும், ஆள்பவனும் தான் முடிவு செய்வார்கள் என கூறியிருந்தார்

இந்த நிலையில் தமிழிசையை தேர்தலில் களமிறக்க பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆளுநர் என்ற முறையில் பங்கேற்று வரும் தமிழிசை, வரும் மார்ச் மாதம் யாருக்காகவும் நேரம் ஒதுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

பாஜக தேசிய தலைமை உத்தரவிட்டால் அடுத்த நிமிடமே ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட தமிழிசை களறிங்க உள்ளதாகவும், தூத்துக்குடி அல்லது சென்னையில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி