10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்… தமிழகம் முழுவதும் 9.55 லட்சம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்பு

Author: Babu Lakshmanan
6 May 2022, 9:32 am

தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்குகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக மாணவர்கள் பள்ளிக்கு வர முடியாமல் வீடுகளிலேயே முடங்கி இருந்தனர். குறிப்பாக கடந்த 2 வருடமாக பொதுத்தேர்வு நடத்தப்படாத நிலை ஏற்பட்டது. இந்த ஆண்டு கொரோனா தொற்று என்பது படிப்படியாக குறைந்து வந்த நிலையில் மாணவர்கள் பள்ளிக்கு சென்று பாடங்களைக் கற்பித்து வந்தனர்.

தொடர்ந்து, இந்த முறை வெற்றிகரமாக பொதுத் தேர்வை நடத்தி முடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று முன்தினம் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் 3,936 தேர்வு மையங்களில் 9.55 மாணவ, மாணவிகள் இந்தத் தேர்வை எழுதுகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் 149 மையங்களில் 41,811,மாணவர்கள் 10ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதுகின்றனர். கோவை மாவட்ட பள்ளிகளில் ஆர்வத்துடன் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்கள் அனைவரும், முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தி வருகின்றனர்.

அதே போல, தேர்வு மையங்களுக்கு வரும் மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனைகள் மேற்கொள்ளபட்டு, சானிடைசர் வழங்கி வருகின்றனர். தொடர்ந்து தேர்வு மையங்களில் ஒவ்வொரு மாணவருக்கும் சமூக இடைவெளி பின்பற்றி அமர்ந்து தேர்வு எழுதுகின்றனர். அதேபோல தேர்வு மையங்களில் மாணவர்களை கண்காணிக்க சிறப்பு பறக்கும் படை நியமிக்கப்பட்டுள்ளனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1900

    0

    0