கோவை சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் உதயகுமார். இவர் கோவையில் பல ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நித்யாவள்ளி, கோவில்பாக்கம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், உதயகுமார், தனது காரில் பொள்ளாச்சி வரை செல்வதாக கூறி வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
மைலேரிபாளயம் அருகே கோழிப்பண்ணை முன்பாக காரில் சென்று கொண்டிருந்த அவரை மர்ம கும்பல் வழிமறித்து, சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். பின்னர், அவரது காரையே எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. எக்ஸ் தளத்தில் அவர் போட்டுள்ள பதிவில் கோவையில் நேற்று வழக்கறிஞர் உதயகுமார் என்பவர்,வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில்,திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கொலைகள் சர்வ சாதாரணமாகி இருக்கின்றன.
சட்டம் ஒழுங்கு தனது நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் என்று உறுதியளித்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் இது குறித்து எந்த நடவடிக்கைகளும் எடுத்ததாகத் தெரியவில்லை. மாறாக, அமைச்சர்கள், கொலைகள் நடக்கத்தான் செய்யும் என்ற ரீதியில் பேசுவது முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல.
ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் தொடங்கி, திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என யார் உயிருக்கும் உத்தரவாதமில்லாத நிலை, தமிழகத்தில் நீடிப்பது அச்சத்திற்குரியது.
சமூக வலைத்தளங்களில், திமுக அரசின் தவறுகளை விமர்சிப்பவர்களைக் கைது செய்வதற்காக மட்டுமே காவல்துறையினர் பயன்படுத்தப்படுகின்றனரே தவிர, காவல்துறையின் முக்கியக் கடமையான சட்டம் ஒழுங்கு, முற்றிலும் சீர்குலைந்து கிடப்பது, அரசியல் கடந்து மிகவும் வருந்தத்தக்கது.
காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் சட்டம் ஒழுங்கைக் காக்க இனியும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என்றால், தமிழக அரசியல் வரலாற்றில், கையாலாகாத முதலமைச்சர் என்றே அறியப்படுவார் என பதிவிட்டுள்ளார்.
அண்மையில் திடீர் என விஜே பிரியங்கா பிரபல DJ வசி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் முக்கிய…
மனைவியிடம் கேட்ட சரத்குமார்? கடந்த 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை…
விஜய் டிவியில் பாப்புலரான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் பவித்ரா லட்சுமி. இவர் நாய் சேகர் உள்ளிட்ட…
பிக்பாஸ் ஜோடி பிரபல சின்னத்திரை நட்சத்திரமான பாவனி “பிக் பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டபோதுதான் முதன்முதலாக அமீரை…
இழப்பீடு கேட்ட இளையராஜா ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் ஆங்காங்கே பல காட்சிகளில்…
சேலத்தில் பாஜக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, செந்தில் பாலாஜியின் செய்தியை திசை…
This website uses cookies.