பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பேசி வருவதாக பிரபல நடிகையின் மீது பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு, தமிழகத்தில் கட்சி வலுப்பெற்று வருவதாக எதிர்கட்சியினரே கூறி வருகின்றனர். அந்த அளவுக்கு அவரது செயல்பாடுகள் இருப்பதாக கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில், அண்ணாமலையின் செயல்பாடுகளை விமர்சித்து கட்சியில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள் வெளியேறி வருகின்றனர்.
அதுபோன்று வெளியேறியவர்தான் பிரபல நடிகை காயத்ரி ரகுராம். பாஜகவில் இருந்து வெளியேறியது முதல் அண்ணாமலை மற்றும் அவரது ஆதரவாளர்களை சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில், காயத்ரி ரகுராம் மீது தமிழக பாஜக சார்பில் சென்னை சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலை மீது சமூக வலைதளத்தில் தொடர்ந்து அவதூறு கருத்து பரப்பி வரும் காயத்ரி ரகுராம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளனர்.
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
நடனப்புயல் நடனப்புயல் எனவும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனவும் அழைக்கப்படும் பிரபுதேவா, இந்தியாவின் தலை சிறந்த நடன அமைப்பாளர் ஆவார்.…
This website uses cookies.