உங்க பதிலை கேட்டு சிரிப்பதா? அழுவதா? அமைச்சரைச் சாடிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…!!

Author: Sudha
3 August 2024, 4:42 pm

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொலைச் சம்பவங்கள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தமிழகம் கொலை மாநில அல்ல ‘கலை’ மாநிலம் எனவும், குற்றவாளிகளை களை எடுக்கும் மாநிலம் என பதிலளித்துள்ளார். மேலும் தமிழகத்தில் நடைபெறும் கொலைகளுக்கு அரசை குறை கூறுவது ஏற்புடையது அல்ல வன்முறை சம்பவங்களுக்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. பழிக்குப் பழி வாங்கும் கொலையில் அரசு ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் தடுக்க முயற்சிக்கிறோம். அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்தால் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் பதிலளித்தார்.

இதை குறித்துப் பேசிய தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் அதிகரித்து வரும் கொலை சம்பவங்கள் குறித்த கேள்விக்கு அமைச்சர் ரகுபதி கூறும் பதிலைக் கேட்டு சிரிப்பதா? அழுவதா? என தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.

போலீஸ் மீதான அச்சம் போய் விட்டதால், நாள்தோறும் 15 கொலை நடக்கிறது. தற்போது கொலை சம்பவங்கள் அதிகரித்து உள்ளது. இதற்கு, போலீஸ் ஸ்டேசனில் போலீசார் வேலை செய்வதில்லை. போலீசாரின் கைகள் கட்டப்பட்டதே காரணம்.அதிக கொலை நடப்பது தான் எங்களின் குற்றச்சாட்டு. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்பது தெளிவாகி உள்ளது.

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மீது சந்தேகம் உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் கூறுகிறார். ஆனால், தி.மு.க., கர்நாடக அரசிடம் பணம் வாங்கி விட்டதா என்பது தான் எனது சந்தேகம். இதுவரை கர்நாடகா காங்கிரஸ் அரசை ஒரு வார்த்தை கூட அவர்கள் விமர்சிக்கவில்லை. அறிக்கை விடவும் இல்லை.

கர்நாடகாவில் தி.மு.க.,வினருக்கு தொழில் உள்ளது. விமர்சித்தால் அதற்கு பாதிப்பு வரும் என அஞ்சுகின்றனர். காங்.அரசு செய்யும் தப்பை ஏன் தி.மு.க., கேட்கவில்லை என மக்கள் நினைக்கின்றனர். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

  • Anirudh is in love with the daughter of a famous businessman. பிரபல தொழிலதிபரின் மகளை காதலிக்கும் அனிருத்.? இவங்களுக்குள்ள இப்படி ஒரு கனெக்ஷனா?