சென்னை ; திறனற்ற திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தமிழகம் குற்றவாளிகளின் புகலிடம் ஆகியிருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
செங்கல்பட்டு நீதிமன்ற வாசலில் வழக்கு ஒன்றிற்காக ஆஜராக வந்த தாம்பரம் இரும்புலியூர் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் என்பவரை இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் லோகேஷ் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்கு ஓட ஓட விரட்டி சென்று வெட்டிய மர்ம கும்ப கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தமிழகத்தை உலுக்கிய இந்த சம்பவம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது :- செங்கல்பட்டில், வழக்கு விசாரணைக்காக ஆஜராக வந்த ஒருவரை, நீதிமன்றம் அருகில் வைத்து, நாட்டு வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் கொல்ல முயற்சி செய்துள்ள சம்பவம் குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்தேன். நீதிமன்றத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்கு ஓட ஓட விரட்டி வெட்டியிருக்கிறது அந்த கும்பல்.
திறனற்ற திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தமிழகம் குற்றவாளிகளின் புகலிடம் ஆகியிருக்கிறது. நீதிமன்றங்கள் அருகிலும் இது போன்ற குற்றச் சம்பவங்கள் நடப்பது, இந்த ஆட்சியில் தொடர்கதை ஆகியிருக்கிறது. சட்டம் ஒழுங்கு அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்பது மீண்டும் மீண்டும் புலப்படுகிறது.
இது போன்ற தொடர் சம்பவங்களால், பொதுமக்களுக்கு தங்கள் பாதுகாப்பு குறித்த கேள்வி எழுந்திருக்கிறது. திமுக அரசு தனது மெத்தனப் போக்கைத் தொடராமல், உடனடியாகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.