2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் 18ம் தேதி தாக்கல் : கூட்டத் தொடர் நேரடி ஒளிபரப்பப்படும்… சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

Author: Babu Lakshmanan
8 March 2022, 6:46 pm

சென்னை : 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் 18ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்து சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் 18ம் தேதி தாக்கல் செய்யப்படும். மீண்டும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காகிதமில்லா பட்ஜெட்டாக தாக்கல் செய்கிறார்.

2022-23 ஆண்டுக்கான முன்மன மானியக் கோரிக்கை, 2021-22ம் ஆண்டுக்கான இறுதி துணைநிலை அறிக்கையும் 24ம் தேதி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்வார்.

பட்ஜெட் தாக்கல் நேரடியாக ஒளிபரப்பப்படும். கொரோனா தொற்று அச்சுறுத்தல் இருப்பதால், கடந்த ஆண்டு என்னென்ன தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதோ, அவை இந்த முறையும் கடைபிடிக்கப்படும்.

தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து 18ம் தேதி மாலை நடக்கும் அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும், எனக் கூறினார்.

  • Vidamuyarchi record-breaking release ரிலீசுக்கு முன்னே வரலாற்று சாதனை படைக்குமா ‘விடாமுயற்சி’…ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு..!