தமிழக அமைச்சரவையில் சீனியர்களை பின்னுக்குத்தள்ளி நேற்று அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலின் இடம்பிடித்திருப்பது தமிழக அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்று சுமார் 20 மாதங்கள் முடிவடைந்து விட்டது. இந்த நிலையில், நேற்று சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அதோடு, தமிழக அமைச்சரவை நேற்று 2வது முறையாக மாற்றியமைக்கப்பட்டது.
பின்னர், ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவிற்கு பின் குழு புகைப்படம் எடுக்கப்பட்டது. அதில், சீனியர் அமைச்சர்கள் அமர்ந்திருக்கும் முன்வரிசையில் உதயநிதி ஸ்டாலினுக்கு இடம் ஒதுக்கப்பட்டது. அதேவேளையில், சில சீனியர் அமைச்சர்கள் பின்வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.
இதையடுத்து, தலைமை செயலகத்தில் தனக்கென ஒதுக்கப்பட்ட அறையில் பொறுப்பை ஏற்றுக்கொண்ட உதயநிதி ஸ்டாலின், 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.
இந்த நிலையில் அமைச்சரவையின் சீனியாரிட்டி அடிப்படையில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அடுத்த படியாக அமைச்சர் துரைருகன், கே.என்.நேரு, ஐ. பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு, எம்ஆர்கே. பன்னீர் செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர், தங்கம் தென்னரசு ஆகியோர் முதல் 9 இடங்கள் ஒதுக்கப்பட்டது.
இதற்கு அடுத்தபடியாக 10வது இடத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் இடம் வழங்கப்பட்டிருப்பது தற்போது விமர்சனத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக 11 மற்றும் 12வது இடங்களில் அமைச்சர்கள் ரகுபதி, முத்துசாமிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் முத்துச்சாமி எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மூத்த அமைச்சராவார். உதயநிதிக்கு பிறகு அவருக்கு இடம் ஒதுக்கப்பட்டிருப்பது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், sபெரியகருப்பண், தாமோ.அன்பரசன், மு.பே.சாமிநாதன், கீதா ஜீவன், அனிதா ராதகிருஷ்ணன்,ராஜ.கண்ணப்பன் என இரண்டு முறைக்கும் மேல் அமைச்சர்களாக இருந்தவர்கள் பின் வரிசையை பிடித்துள்ளனர். குறிப்பாக, அமைச்சர் செந்தில்பாலாஜி 21வது இடத்திலும், நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் 27வது இடத்திலும் உள்ளனர்.
இந்த அமைச்சரவையின் சீனியாரிட்டி பட்டியலை அதிமுக, பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர்.
இது தொடர்பாக அதிமுக பிரமுகர் ராஜ் சத்யன் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியதாவது :- பலமுறை அமைச்சர்களாக இருந்தவர்கள், 1985 முதல் அமைச்சராக இருக்கும் திரு.முத்துச்சாமி, நிதி அமைச்சராக இருக்கும் திரு பிடிஆர் போன்றவர்களை பின்னுக்கு தள்ளி அமைச்சரவை சீனீயாரிட்டி பட்டியலில் விளையாட்டுதுறை அமைச்சர் உதயநிதிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருப்பது எதன் அடிப்படையில்?, என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதே போல பல தரப்பினரும் உதயநிதிக்கு எந்த அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்பட்டிருப்பதாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.