தமிழகத்தை உலுக்கும் கொரோனா : இன்று ஒரே நாளில் சுமார் 30 ஆயிரம் பேருக்கு பாதிப்பு.. மெல்ல மெல்ல அதிகரிக்கும் உயிரிழப்பு!!

Author: Babu Lakshmanan
21 January 2022, 8:03 pm

சென்னை: தமிழகத்தில் மேலும் 29,848 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 29,848 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 லட்சத்து 72 ஆயிரத்து 666 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 358 ஆக அதிகரித்துள்ளது. இன்று 33 பேர் உயிரிழந்துள்ளார்.

இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 145 ஆக அதிகரித்துள்ளது. இன்று 21,684 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28 லட்சத்து 48 ஆயிரத்து 163 ஆக அதிகரித்துள்ளது. இதில். அதிகபட்சமாக சென்னையில் 7,038 பேருக்கும், இதற்கு அடுத்தபடியாக கோவையில் 3,653 பேருக்கும், மூன்றாவது இடத்தில் செங்கல்பட்டில் 2,250 பேருக்கும், கன்னியாகுமரியில் 1,248 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 10608

    0

    0