9ம் வகுப்பு மாணவர்களுக்கு குட்நியூஸ்… இனி 5 பாடங்கள் படித்தால் போதும்… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!
Author: Babu Lakshmanan31 May 2022, 12:03 pm
நடப்பு கல்வியாண்டில் 9ம் வகுப்பு மாணவர்கள் இனி 5 பாடங்கள் படித்தால் மட்டும் போதும் என்று தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 10 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்டவை முக்கிய 5 பாடங்கள் ஆகும்.
இந்த சூழலில், கடந்த ஆட்சியின் போது, 9 மற்றும் 10 வகுப்புகளுக்கு தொழில் பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம், 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு 6 பாடங்களாக இருந்தது.
இந்த நிலையில், தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, 9ம் வகுப்பு மாணவர்களுக்கான தொழில் பாடத்தை ரத்து செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, 9ம் வகுப்பு மாணவர்கள் 5 பாடங்களை மட்டும் படித்தால் போதும் என்றும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழில்கல்வி பாடம் நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.