BREAKING ; மதுப்பிரியர்களுக்கு குட்நியூஸ்.. இனி திருமண மண்டபங்களிலேயே கிடைக்கும் மதுபானம்… தமிழக அரசு போட்ட புது உத்தரவு..!!
Author: Babu Lakshmanan24 April 2023, 10:50 am
தமிழகத்தில் விளையாட்டு மைதானங்கள் மற்றும் திருமண மண்டபங்களிலும் மதுபானங்களை பரிமாறுவதற்கு தமிழக அரசு அனுமதியளிக்க முடிவு செய்துள்ளது.
பார்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் மட்டுமே மதுபானம் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் சிறப்பு அனுமதி பெற்று மதுபானங்களை பரிமாறலாம். மாவட்ட ஆட்சியரும், மதுவிலக்கு துணை ஆணையர்களிடம் இதற்கான அனுமதியை பெற வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், பார்கள், நட்சத்திர விடுதிகளில் வழங்கப்பட்டு வந்த மதுபானங்கள், இனி திருமணங்கள் மற்றும் விளையாட்டு கூடங்களிலும் பயன்படுத்த கொள்ளலாம். மேலும், உள்துறை செயலாளர் பணீந்திரரெட்டி வெளியிட்ட அரசிதழ் F.L.2 என்ற லைசென்ஸ்க்கான கட்டணம் விவரங்கள் இடம்பெற்றுள்ளது.
தமிழக அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. டாஸ்மாக்கை மூடுவோம் என வாக்குறுதி அளித்துவிட்டு ஆட்சிக்கு வந்த திமுக, தற்போது, மதுபான விநியோகத்தை விரிவடையச் செய்ய முயற்சிப்பதா..? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.