மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதாக அடுத்தடுத்து புகார்.. அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுத்த தமிழக அரசு..!!

Author: Babu Lakshmanan
8 October 2022, 10:18 am

சென்னை : மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- சமீப காலமாக நமது கழக ஓட்டுநர்கள்‌ மற்றும்‌ ஓட்டுநர்‌ உடன்‌ நடத்துநர்களில்‌ சிலர்‌
தங்களது பணியின்‌ பொழுது மது அருந்திய நிலையில்‌ பணிபுரிவதாக புகார்‌ பெறப்படுகிறது. மது அருந்திய நிலையில்‌ பணிபுரிவது சட்டப்படி குற்றமாகும்‌.

மது அருந்திய நிலையில்‌ பயணிகளிடையே நிர்வாகத்திற்கு அவப்பெயர்‌ ஏற்படுவதுடன்‌ பயணிகளுக்கு நமது கழகத்தின்‌ மீதான நம்பிக்கை குறைவதுடன்‌ தொடர்ந்து நமது கழகப்‌ பேருந்துகளில்‌ பயணிப்பதை தவிர்க்க வாய்ப்புள்ளது.

எனவே, அனைத்து ஓட்டுநர்கள்‌ மற்றும்‌ ஒட்டுநர்‌ உடன்‌ நடத்துநர்கள்‌ பணியின்‌ பொழுது மது அருந்திய நிலையில்‌ பணி புரியக்கூடாது. அவ்வாறு பணியின்‌ பொழுது மது அருந்திய நிலையில்‌ பணிபுரிவது கண்டறியப்பட்டால்‌ காவல்‌ துறை மூலம்‌ நடவடிக்கை எடுக்க வாய்ப்பு மிக அதிக அளவில்‌ உள்ளது. நமது கழத்தில்‌ மது அருந்திய நிலையில்‌ பணியில்‌ கண்டறியப்பட்டால்‌ மிக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை (அடிப்படை சம்பளம்‌ குறைப்பு, பணி நீக்கம்‌) எடுக்கப்படும்‌.

எனவே, பணியாளர்கள்‌ மேற்படி குற்றத்திற்கான பின்‌ விளைவுகளை அறிந்து பணியில்‌
ஒழுங்கீனத்திற்கு இடம்‌ கொடுக்காமல்‌ பணிபுரிய அறிவறுத்தப்படுகிறார்கள்‌, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Bigg Boss Love Proposalபிக் பாஸ் வீட்டில் லவ் பிரபோஸ் செய்த சௌந்தர்யா.. வைரலாகும் ப்ரோமோ!
  • Views: - 393

    0

    0