குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் வந்ததென்றால் தூத்துக்குடி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாறும் என்று ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் இருந்து தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தடைந்தார்.
அப்போது அங்கு அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், பாரத பிரதமர் மோடி எல்லா நேரமும் வெளிநாடு போகிறார். ஆனால் அமெரிக்க பயணமானது, அரசாங்கத்தின் தனி விருந்தினராக அவர் அழைக்கப்பட்டு உலகில் மிக சில தலைவர்களுக்கே கிடைத்த மரியாதை அவருக்கு கிடைத்திருக்கிறது. எகிப்த்தின் உயரிய விருது வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய திருநாட்டிற்கு, பெருநாட்டிற்கு ஒரு பெயர் என்று தான் சொல்ல வேண்டும். உலகத்தில் மிகப் பிரபலமான தலைவர் என்ற பெருமையை பாரத பிரதமர் பெற்றிருக்கிறார்.
தமிழக முதலமைச்சர் வெளிநாட்டு பயணம் என்றால் சாதனை என்கின்றனர். பாரத பிரதமர் வெளிநாட்டு பயணம் சென்றார் விமர்சனம் செய்து கொண்டிருந்தார்கள். தற்போது எல்லோருக்கும் தெரியும். வெளிநாட்டு பயணம் செய்துவிட்டு வந்து முதலீடுகளை ஈர்ப்பது மட்டுமல்ல எந்த அளவிற்கு மற்ற நாடுகளில் துணை நமக்கு கிடைக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
மேலும், தென்பகுதி இன்னும் வளர்ச்சியடைய வேண்டும். நேற்று முன் தினம் வந்தேபாரத் 25வது ரயில் பெட்டி நமது பெரம்பூர் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. முதலில் எல்லாம் இந்த பெட்டிகள் இறக்குமதி செய்யப்பட்டன. இந்த தொழில்நுட்ப முதலிலே இருந்தது. ஆனால் முன்னால் ஆண்டு கொண்டு இருந்த அரசுகள் இதை பயன்படுத்தவில்லை. குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் மிகப்பெரிய ஒரு வாய்ப்பாக தென்பகுதிக்கு கிடைக்கும்.
பத்தாயிரத்திலிருந்து பதினைந்தாயிரம் இளைஞர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் வந்ததென்றால் நமது தூத்துக்குடி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஆகவே, எல்லா விதத்திலும் தென்பகுதியில் வளர வேண்டும் என்பது என்னுடைய பங்கு இருக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.