செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் இ-கேஒய்சி செய்யாத பயனாளிகளின் ரேஷன் கார்டு ரத்து; தமிழக அரசு

Author: Sudha
16 July 2024, 10:03 am

செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் இ-கேஒய்சி செய்யாத பயனாளிகளின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும் எனவும் ரேஷன் கார்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் கேஒய்சி சரிபார்ப்பும் அவசியம் எனவும் பொது விநியோகத் திட்ட விற்பனையாளர்களுக்கும் ரேஷன் கார்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் இ-கேஒய்சி அவசியம் செய்ய வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் வாங்கும் பயனாளிகள் ரேஷன் கார்டை ஆதாருடன் இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. ஆனால் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இந்த விதிமுறை கட்டாயமாக்கப்படவில்லை. எனினும், ரேஷன் கார்டு பயனாளிகள் அனைவரும் இந்த அப்டேட்டை முடிக்க வேண்டியது அவசியம். எனவே ரேஷன் கார்டுதாரர்கள் அனைவரும் தங்களுடைய குடும்ப உறுப்பினர்களின் கேஒய்சி சரிபார்ப்பை செய்து முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் ரேஷன் உதவிகளைத் தொடர்ந்து பெறமுடியாது.அவர்களுடைய ரேஷன் கார்டும் ரத்து செய்யப்படும்.

இப்படி இ-கேஒய்சி செய்வதன் மூலம் நடைபெறும் மோசடிகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ரேஷன் கார்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் கேஒய்சியை கட்டாயமாக செய்து கொள்ளுமாறு அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

எந்த காரணத்திற்காகவும் மாநிலத்திற்கு வெளியே உள்ள ரேஷன் கார்டுதாரர்கள் (யூனியன் பிரதேசம், குஜராத், இமாச்சல பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகா, ஒடிசா, புதுச்சேரி, ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் தவிர ) அவர்களின் கேஒய்சி ஆதார் சரிபார்ப்பை அந்த மாநிலத்தில் உள்ள அவர்களுக்கு அருகிலுள்ள பொது விநியோக முறை விற்பனையாளரிடம் சென்று செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 370

    0

    0