பிப்.,19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்… 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை : நாளை மறுநாள் வேட்புமனு தொடக்கம்

Author: Babu Lakshmanan
26 January 2022, 7:02 pm

சென்னை : தமிழகத்தில் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக பிப்., 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளளது.

21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்னும் தேர்தல் நடைபெறாமல் இருந்து வருகிறது. இதனால், 2022ன் தொடக்கத்தில் தேர்தலை நடத்தி முடிக்க உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் ஆயத்தமாகி வந்தது. ஆனால், கொரோனா தொற்றை காரணம் காட்டி, தேர்தலை ஒத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

பல்வேறு கட்ட விசாரணைக்குப் பிறகு, உரிய வழிகாட்டு விதிமுறைகளுடன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க நீதிபதிகள் நேற்று ஆணை பிறப்பித்தனர். அதன்படி, இன்று மாலை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதியை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பிப்.,19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். 649 நகர்ப்பு உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. 28ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கும்.வேட்புமனு தாக்கல் செய்ய பிப்.,04;ம தேதி கடைசி நாளாகும். வேட்புமனு பரிசீலனை பிப்.,05 ஆகும். வேட்புமனுக்களை திரும்பப்பெற பிப்.,07ம் தேதி இறுதி நாளாகும். வாக்குப்பதிவு பிப்.,19ம் தேதி நடக்கும். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும். தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்.,22ம் தேதி எண்ணப்படும்.

தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மார்ச் 2ம் தேதி பதவியேற்பார்கள். மறைமுக தேர்தல் மார்ச் 4ம் தேதி மறைமுக தேர்தல் நடைபெறும். 80,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 31,029 வாக்குச்சாவடி இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன, என தெரிவித்துள்ளார்.

  • I trusted director Bala and went astray.. The actor has left cinema இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!