டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த தமிழக அனைத்து கட்சி எம்பிக்களும் நிவாரண நிதியை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் 3 மற்றும் 4-ம் தேதிகளில் மிச்சாங் புயலினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெருமழை ஏற்பட்டு, அதன் காரணமாக கடுமையான பாதிப்புகளும், பொது மக்களுக்கு வாழ்வாதார பாதிப்புகளும் ஏற்பட்டன. அதேபோன்று, டிசம்பர் 17 மற்றும் 18-ம் தேதிகளில் ஏற்பட்ட வரலாறு காணாத அதிக மழைப் பொழிவின் காரணமாக, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன.
தமிழகத்தில் கடந்த மாதம் பெய்க கனமழையினால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களும், தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட வட மாவட்டங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்த பேரிடர்களுக்கு மத்திய அரசிடம் இருந்து ரூ.37,907 கோடியை நிவாரணமாக தமிழக அரசு கோரியது. மத்திய அரசு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து சுமார் 900 கோடியை வழங்கியது. இதையடுத்து, மத்திய குழுவினரும் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை அனுப்பினர். பின்னர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. திருச்சி விமான நிலைய திறப்பு விழாவுக்கு வந்த பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் நேரிடையாகவே நிவாரணத் தொகையை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
இதனிடையே, நிவாரணத் தொகை வழங்குவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க தமிழக அனைத்து கட்சி எம்பிக்கள் சார்பில் நேரம் ஒதுக்க கோரப்பட்டது. அதன்படி, தமிழக எம்பிக்கள் குழு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் இன்று சந்தித்தனர். திமுகவின் டிஆர் பாலு , காங்கிரஸ் கட்சி ஜெயக்குமார் , மதிமுகவின் வைகோ , முஸ்லீம் லீக் கட்சியின் நவாஸ் கனி , மார்க்சிஸ்ட் கட்சியின் நடராஜன் , விசிக கட்சியின் ரவிக்குமார், உள்ளிட்ட எம்.பி.க்கள் குழு சந்தித்தது.
இந்த சந்திப்பின் போது, மிக்ஜம் புயல் பாதிப்பு மற்றும் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண நிதியை வழங்கக் கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.