இரவுநேர ஊரடங்கு வாபஸ்… ஞாயிறு லாக்டவுன் கிடையாது : பிப்.,1 முதல் பள்ளிகள் திறப்பு : தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Author: Babu Lakshmanan
27 January 2022, 8:10 pm

சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் அதிகரித்துள்ள வேளையிலும், பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தற்போது ஓரளவுக்கு குறைந்திருந்தாலும், நாளொன்று சராசரி பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்கியே பதிவாகி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசும் வார இறுதி ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்குகளை அமல்படுத்தியுள்ளது. மேலும், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி கிடையாது. இந்தக் கட்டுப்பாடுகள் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ளது

கொரானா ஊரடங்கில் தளர்வுகளை அறிவிப்பது குறித்தும், பள்ளிகளை திறப்பது குறித்தும் சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது :-

தமிழகத்தில் பிப்.,1ம் தேதியில் இருந்து 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு

பிப்.,1ம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், பல்கலை., உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறப்பு

தமிழகத்தில் வரும் 28ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு வாபஸ்

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இல்லை

திருமணம் சார்ந்த நிகழ்வுகளுக்கு 100 பேரும், இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு 50 பேரும் அனுமதி

ஜிம், துணிக் கடைகள், நகைக் கடைகள், சலூன்கள் மற்றும் உள் விளையாட்டு அரங்குகளில் 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அனுமதி

திரையரங்குகளிலும் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற கட்டுப்பாடு தொடர்கிறது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 3256

    0

    0