திடீரென U-TURN அடித்த தேர்தல் ஆணையம்… தமிழ்நாட்டில் பதிவான மொத்த வாக்குப்பதிவில் திடீர் மாற்றம்..!!

Author: Babu Lakshmanan
20 April 2024, 9:01 am

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பதிவான மொத்த வாக்கு பதிவின் சதவீதத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்டமாக தேர்தல் தமிழகம், புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் நடைபெற்றது. காலை 7 மணி முதலே தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. மக்கள் காலை முதலே ஆர்வமாக வாக்களித்தனர். கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல், இளம் வாக்காளர்கள் முதல் சீனியர் வாக்காளர்கள் வரை வாக்களித்தனர்.

மேலும் படிக்க: கடைசி நேரத்தில் திடீர் டுவிஸ்ட்.. கோவையில் பதிவான வாக்குப்பதிவு சதவீதம் எவ்வளவு தெரியுமா..?

இந்த நிலையில், நேற்று இரவு 7 மணி நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 67.35% வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் மொத்த சராசரி வாக்குப்பதிவு 69.46% என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது வாக்காளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, நேற்று இரவு 7 மணி நிலவரப்படி 72.09 சதவீதம் வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 3 சதவீதம் குறைந்துள்ளது.

இதன்மூலம், மாவட்ட வாரியாக பதிவான வாக்குகளின் சதவீதமும் குறைந்துள்ளது.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 375

    0

    0