தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியது. வழக்கம் போல, மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் நிகழாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு மாநிலம் முழுவதும் 3,324 தேர்வு மையங்களில் கடந்த மார்ச் 13 முதல் ஏப். 3-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுத 8 லட்சத்து 36,593 பள்ளி மாணவர்கள், 23,747 தனித் தேர்வர்கள், 5,206 மாற்றுத்திறனாளிகள், 6 மூன்றாம் பாலினத்தவர் மற்றும் 90 சிறைக் கைதிகள் என ஒட்டுமொத்தமாக 8.65 லட்சம் பேர் வரை பதிவு செய்திருந்தனர்.
அவர்களில் 8.17 லட்சம் மாணவர்கள் மட்டுமே தேர்வில் கலந்துகொண்டனர். பல்வேறு காரணங்களால் சுமார் 48,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் பங்கேற்வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுதேர்வில் 94.3% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு தேர்ச்சி சதவிகிதம் 93.76%ஆக இருந்த நிலையில் இந்தாண்டு 94.30%ஆக உயர்ந்துள்ளது.
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் 91.45% பேரும், மாணவியர் 96.38% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 தேர்வை 8,03,385 பேர் எழுதிய நிலையில் 7,55,451 மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். 97.85% தேர்ச்சியுடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 326 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சியடைந்துள்ளனர்.
பாடவாரியாக 100க்கு 100 பெற்ற மாணவர்கள்
தமிழ் மொழி – 2 பேர்
ஆங்கிலம் – 15 பேர்
பொருளியல் – 1,760 பேர்
வணிகவியல் – 5678
கணக்குப்பதிவியல் – 6,573 பேர்
இயற்பியல் – 812 பேர்
கணிதம் – 690 பேர்
கணிதம் & புள்ளியல் – 1,334 பேர்
உயிரியல் – 1,494 பேர்
தாவரவியல் – 340 பேர்
விலங்கியல் – 154 பேர்
வேதியியல் – 3,909 பேர்
கணினி அறிவியல் 4,618
கணினி பயன்பாடுகள் – 4051 பேர்
தேர்ச்சியில் முதல் 5 இடங்களை பிடித்த மாவட்டங்கள்
விருதுநகர் – 97.85 சதவீத தேர்ச்சி
திருப்பூர் – 97.79 சதவீத தேர்ச்சி
பெரம்பலூர் – 97.59 சதவீத தேர்ச்சி
கோவை – 97.57 சதவீத தேர்ச்சி
தூத்துக்குடி – 97.36 சதவீத தேர்ச்சி
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.