சென்னை மாநகராட்சிக்கு மேயராகும் 28 வயதான பெண் : கோவை உள்ளிட்ட 21 மாநகராட்சிகளின் மேயர், துணை மேயர் போட்டியாளர்களை அறிவித்தது திமுக..!!

Author: Babu Lakshmanan
3 March 2022, 1:43 pm

சென்னை, கோவை உள்ளிட்ட மாநகராட்சிகளின் மேயர், துணை மேயர் பதவிக்கு போட்டியிடுபவர்களின் பெயர்களை திமுக தலைமை அறிவித்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதி நடைபெற்றது, இதற்கான முடிவுகள் 22ம் தேதி வெளியாகியது. இதில், 21 மாநகராட்சி மற்றும், பேரூராட்சி, நகராட்சிகளின் பெரும்பாலான இடங்களில் திமுகவே கைப்பற்றியுள்ளது. வெற்றி பெற்ற வேட்பாளர் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.

மேயர், துணை மேயர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நாளை நடைபெற இருக்கிறது. இதைத் தொடர்ந்து, மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவிகளில் திமுக கூட்டணி போட்டியிடும் இடங்களை திமுக தலைமை அறிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, கோவை, சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை மாநகராட்சிகளுக்கான மேயரை திமுக தலைமை அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியின் மேயராக ஆர்.பிரியாவும், துணை மேயராக மகேஷ் குமாரும் அறிவிக்கப்பட்டுள்ளனர். சென்னை மேயராக அறிவிக்கப்பட்டுள்ள பிரியாவுக்கு 28 வயதே ஆகிறது. இதன்மூலம், சென்னை மாநகராட்சிக்கு மிக குறைந்த வயது மேயர் என்ற பெருமையை பெற உள்ளார்.

இதேபோல, மதுரை மேயராக இந்திராணியும், திருச்சி மேயராக அன்பழகனும், துணை மேயராக திவ்யாவும், திருநெல்வேலி மேயராக சரவணனும், துணை மேயராக ராஜுவும், கோவை மேயராக கல்பனாவும், துணை மேயராக வெற்றிச்செல்வனும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…