12 மாநகராட்சிகளை கைப்பற்றியது திமுக… கோவை, ஈரோடு, திருப்பூர் மாநகராட்சிகள் யாருக்கு..?

Author: Babu Lakshmanan
22 February 2022, 3:03 pm

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் தற்போது வெளியான முடிவுகள் வரையில், 12 மாநகராட்சிகளை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 19ம் தேதி தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் திமுக, கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது அமைத்த அதே கூட்டணியுடன் தேர்தல் சந்தித்துள்ளது. அதிமுக, பாஜக, பாமக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அமமுக, தேமுதிக மற்றும் சுயேட்சைகள் என பலமுனை போட்டி நிலவியது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

நகராட்சி, மாநகராட்சி மற்றும் பேரூராட்சி அமைப்புகளில் திமுக மற்றும் அதனை கூட்டணி கட்சிகளே முன்னிலை பெற்று வருகிறது. அதிமுகவுக்கு எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்கவில்லை.

இந்த நிலையில், தற்போது வரையில் வெளியாகியுள்ள முடிவுகளின் அடிப்படையில் 12 மாநகராட்சிகளை திமுக கூட்டணி கைப்பற்றி விட்டது. மதுரை, தூத்துக்குடி, நாகர்கோவில், நெல்லை, கடலூர், திருச்சி, கும்பகோணம், சேலம், சிவகாசி, திண்டுக்கல், தஞ்சை, கரூர் ஆகிய மாநகராட்சிகளை தன்வசப்படுத்தியுள்ளது.

தற்போது வரையில் சென்னையில் 50க்கும் அதிகமான இடங்களை திமுக கைப்பற்றியுள்ளது. எனவே, சென்னை மாநகராட்சியும் திமுகவே கைப்பற்றும் என்று தெரிகிறது.

கோவை, திருப்பூர், ஈரோடு, ஆவடி, வேலூர், ஒசூர், காஞ்சிபுரம், தாம்பரம் ஆகிய மாநகராட்சிகளை கைப்பற்றப்போவது யார்..? என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடையே எழுந்துள்ளது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?