இந்த நாளை குறிச்சு வச்சுக்கோங்க.. சென்னைக்கு தரமான சம்பவம் இருக்கு… தமிழக வெதர்மேன் கொடுத்த வார்னிங்..!!

Author: Babu Lakshmanan
29 October 2022, 1:46 pm

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், சென்னையில் ஒருநாள் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தமிழக வெதர்மேன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கேரளா, கோவா, மகாராஷ்டிர உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை கடந்த 23ம் தேதி தாமதமாக விலகியது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் நல்ல பலனை கொடுக்கும் வடகிழக்கு பருவமழையும் தாமதமாக இன்று தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கினாலும், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. தென் மாவட்டங்களில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மழை பெய்ததால் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தில் ஒரு சுணக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், சென்னையில் ஒருநாள் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தமிழக வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து சமூக வலைதள பக்கத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது :- மத்திய கடலோர பகுதி, தென் கடலோர பகுதி, தென் தமிழகம் ஆகியவற்றில் இன்று மழை தொடங்கும். அது போல் வட கடலோர தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் அக்டோபர் 31 ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 1 வாரம் வரை நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது.

6 நாட்களில் ஒரு நாள் சென்னையில் வரும் 31 ஆம் தேதி அல்லது நவம்பர் 1 ஆம் தேதி தரமான சம்பவம் நடைபெறும். மேலடுக்கு சுழற்சியால் வரும் நவம்பர் 5ஆம் தேதி வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 6 நாட்களில் குறைந்தபட்சம் சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களுக்கு ஒரு நாளாவது சிறந்த நாளாக அமையும். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் போல் இந்த ஆண்டும் மழை பெய்யும், எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • kalakalappu 3 movie update குஷ்பூவுடன் கை கோர்த்த பிரபல தொழில் அதிபர்…கலகலப்புக்கு இனி பஞ்சமில்லை..!
  • Views: - 416

    0

    0