தமிழர்கள் எங்களுக்கு அடையாளம் தந்தனர்.. மத்திய அரசு எங்களுக்கு அங்கீகாரம் கொடுத்தனர் : ஆளுநர் தமிழிசை!!

Author: Udayachandran RadhaKrishnan
20 February 2023, 1:38 pm

கோவை பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஊழியர்கள் தின விழா நிகழ்ச்சி இன்று கொண்டாடப்பட்டது. இதில் புதுச்சேரி மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அவர், பணியாளர்கள் தினம் என்பது உன்னதமான தினம் எனவும் எனது மகனும் மருமகளும் இந்த கல்லூரியில் வேலை செய்து வருகிறார்கள் என்றார்.

முதன் முதலில் தேசிய கீதம் பாடிய முதல் குழுமம் இந்த பிஏஜி குழுமம் என புகழ்ந்தார். தொழில்கல்வியை தமிழகத்தில் கொண்டுவர தமிழை தூக்கிப் பிடிக்க நினைத்தவர்கள் கூட தொழில்கல்விகள் தமிழை புகுத்த முடியாமல் திணறி வருகிறார்கள் என கூறிய அவர் ஆனால் இந்த நிறுவனம் தமிழை தொழில் கல்லூரியில் கொடுத்து உள்ளது எனவும் கெமிஸ்ட்ரியை தமிழில் முதன் முதலில் சொல்லிக் கொடுத்தது இந்த கல்லூரி தான் என தெரிவித்தார்.

மேலும் பணியாளர்கள் தங்கள் வேலையை நிறுவனத்துடன் ஒத்துழைத்து வேலை செய்ய வேண்டும் எனகூறினார். எனக்கு தோசை பிடிக்கும் என்பதால் தோசையை செய்ய சமையல்காரரை வற்புறுத்தாமல் அவர்களுக்கு தெரிந்த இட்லியை அருந்த பழகிக் கொண்டேன்.

எனக்கு காரில் வேகமாக செல்வது பிடிக்கும் என்பதால் ஓட்டுநரை வேகமாக காரை ஓட்ட சொல்லாமல் மெதுவாக செல்லும் அதனையும் பழகிக் கொண்டேன் என்றார்.

தற்போது உள்ள பேராசிரியர்கள் google உடன் போட்டி போட வேண்டிய நிலை உள்ளது எனவே பேராசிரியர்கள் அனைத்தையும் அறிந்து வைத்திருக்க வேண்டும் நான் பேராசிரியராக இருக்கும்போது கடைசி பெஞ்ச் மாணவர்களை மட்டுமே கவனத்தில் கொள்வேன் என்றார்.

மகாபாரதத்தில் கர்ணன் மடியில் குரு உறங்கிக் கொண்டிருந்த போது வண்டு வந்து துளைத்த போதும் ஆசிரியர் மடியில் இருப்பதால் கர்ணன் அப்படியே அமர்ந்திருந்தார்.

அதேபோல மாணவரிடம் ஆசிரியர் கேட்டபோது அது மாதிரி நிகழ்வு ஏற்பட்டால் நானும் அப்படியே இருப்பேன் என்று அந்த மாணவர் பதிலளித்தார்.

அதற்கு அந்த ஆசிரியர் என் மீது அவ்வளவு பாசமா என்று கேட்ட பொழுது அந்த மாணவன் இல்லை நான் எழுந்தால் நீங்கள் மீண்டும் எழுந்திருத்து பாடம் நடத்துவீர்கள் அதனால் அதை செய்ய மாட்டேன் என கூறினான். அப்படிப்பட்ட மாணவர்களே ஆசிரியர்கள் சமாளிக்க வேண்டிய நிலை உள்ளது.

அனைவரும் யோகா கற்றுக் கொள்ள வேண்டும் ஒரு பெரியவர் என்னிடம் இரண்டு செல்போன்கள் எப்படி வைத்துள்ளீர்கள் என்று கேட்டபோது இரண்டு மாநிலத்தையே சமாளிக்கிறேன் இரண்டு செல்போனை சமாளிக்க முடியாதா.

அது போலத்தான் அனைவரும் பணியாற்ற வேண்டும் எல்லா மாநிலங்களும் பணியாளர்கள் தினம் கொண்டாட வேண்டும் பணியாளர்கள் தினம் என்பது உன்னதமான தினம் என தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பணியாளர்கள் தினம் ஒவ்வொரு மாநிலங்களிலும் கொண்டாட வேண்டும், அந்த எண்ணம் தற்போது தோன்றுகிறது. மாநிலங்களில் அதை அமல்படுத்த திட்டமிருக்கிறது.

ஆளுநர்கள் தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவது என்பது ஜனாதிபதி அவர்களால் உள்துறை அமைச்சரால் தேர்ந்தெடுக்கப்படுவதாகும். தமிழக மக்கள் எங்களைப் போன்ற நிர்வாக திறன் உள்ளவர்களை அங்கீகரிக்கப்படவில்லை மத்திய அமைச்சகம் எங்கள் திறமையை அடையாளம் கண்டு கொள்கிறார்கள்.

தமிழக மக்கள் எங்களை அடையாளம் கொண்டுவந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆக்கியிருக்கலாம். ஆனால் மத்திய அமைச்சகம் எங்களை அங்கீகரித்து எங்கள் திறமையை வீணடிக்க வேண்டாம் என ஆளுநராக ஆக்கி உள்ளது.

எங்களைப் போன்றவர்கள் திறமை மிக்கவர்கள். எனவே அவர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள் இதைச் சொன்னால் அது குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வரக்கூடும்.

மக்கள் திறமையானவர்களை கண்டு கொள்ள வேண்டும் என்பதே எனது கோரிக்கை. வடமாநில தொழிலாளர்கள் தமிழ் தொழிலாளர்கள் பிரச்சனை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், வட மாநில தொழிலாளர்கள் இங்கு வந்து பணியாற்ற யார் வாய்ப்பை கொடுத்து இருக்கிறார்கள் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். அதை அறிந்து கொண்டு அதன் பின் கருத்து கூறலாம், என தெரிவித்தார்.

தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து நான் பேச இயலாது நான் ஆளுநர் என தெரிவித்த அவர் அது குறித்து கட்சித் தலைவர்களிடம் கேள்வி கேளுங்கள் என கூறினார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 404

    0

    0