டாஸ்மாக் மது விற்பனையால் திமுக பிரமுகர்களின் சாராய ஆலைகளுக்கு அதிக வருவாய் : அண்ணாமலை குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
1 August 2023, 10:05 pm
Quick Share

தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை ராமநாதபுரத்தில் என் மண் என் மக்கள் என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். கடந்த 3 நாட்களாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்ட அண்ணாமலை இன்று சிவகங்கை வந்தார். அதன்படி, அண்ணாமலையின் சிவகங்கை பேருந்து நிலையம் முன்பாக இன்று திறந்த வேனில் நின்றபடி அண்ணாமலை பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

“என் மண் என் மக்கள்” யாத்திரையில் நடந்து வந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜிக்கு இன்னும் எல்லா வசதி வாய்புகளும் கொடுக்கப்படுகிறது. ஊதியம் வருகிறது. அல்லவன்ஸ் கிடைக்கிறது. அமைச்சருக்கான சம்பளம் எதற்கு கிடைக்கிறது என்றால் மக்கள் பணி செய்வதற்கான ஊதியம். அரசியலில் முழு நேரமாக வேலை பார்க்கிறார்கள் என்பதற்காகத்தான் அமைச்சர்களுக்கு சம்பளம்.

ஆனால் எந்த வேலையும் பார்க்காமல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு மாதா மாதம் நான் சம்பளம் கொடுத்து துறை இல்லாமல் அமைச்சராக வைத்திருப்பேன் என்று ஸ்டாலின் சொல்கிறார் என்றால் எந்த அளவுக்கு ஊழலுக்கு திமுகவின் முதல் குடும்பம் உள்ளது என்று தெரிகிறது. தமிழகத்தில் நடக்கும் ஊழல் ஆட்சி நம்மை சுரண்டிக் கொண்டு இருக்கிறது. இப்படியே இன்னும் 2, 3 வருடங்கள் போனால் நம்மிடம் இருக்கும் உடை மட்டும் தான் மிஞ்சுமே தவிர வேறு எதுவும் மிஞ்சாது.

நம்பர் 1 மாநிலமாக மாற்றுகிறேன் என்று சொல்லிவிட்டு முதல்வர் ஸ்டாலின் வந்தார். உண்மையாகவே நம்பர் மாநிலமாக எதில் மாற்றியிருக்கிறார் என்றால் இந்தியாவிலே கடன் வாங்கியதில் முதல் மாநிலம் தமிழகம். 3-வது இருந்தோம். போன வருஷம் 2-வது வந்தோம்.. இந்த ஆண்டு ஜூலையில் முதலிடத்திற்கு வந்துவிட்டோம். ஒவ்வொருவர் தலைமீதும் 3 லட்சத்து 52 ஆயிரம் கடன் உள்ளது. மக்கள் பெயரை சொல்லி கடனை வாங்கி அவர்கள் செல்வம் கொழித்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த மாடலின் பெயர்தான் திராவிட மாடல்.

பாஜகவிற்கும் திமுகவிற்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான் உள்ளது. ஒரே வரியில் சொல்வது என்றால் பாஜகவுக்கு என் மண் என் மக்கள் என்பதுதான்.. இதே திமுக இந்த யாத்திரையை நடத்தியிருந்தால் “என் மகன் என் பேரன்” என்று பெயர் வைத்திருக்கும். ஒன்பது ஆண்டாக மோடி எந்தவித ஊழலுக்கும் இடம் கொடுக்காமல் ஆட்சி நடத்தி வருகிறார். நாட்டை பிரதானமாக வைத்து அல்லும் பகலும் பிரதமர் மோடி வேலை செய்து கொண்டு இருக்கிறார். அதனால்தான், பொருளாதார வளர்ச்சியில் ஐந்தாவது பெரிய நாடாக இந்தியா வந்துள்ளது என கூறினார்.

  • kanguva Day 2 Boxoffice Prediction Beat indian 2 and Vettaiyan கங்குவா பாக்ஸ் ஆபிஸ்: 2ஆம் நாள் வசூல் கணிப்பு
  • Views: - 298

    0

    0