பாஜக ஆட்சிக்கு வரும் போது டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு கள்ளுக்கடைகள் திறக்கப்படும்.. அண்ணாமலை அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
10 January 2024, 9:41 pm

பாஜக ஆட்சிக்கு வரும் போது டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு கள்ளுக்கடைகள் திறக்கப்படும்.. அண்ணாமலை அறிவிப்பு!!

‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக பாதயாத்திரை மேற்கொண்டு வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் நடைபயணம் மேற்கொண்டார்.

அப்போது மக்கள் மத்தியில் உரையாற்றிய அண்ணாமலை, “ஏழை மக்களுக்காக ஓர் ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக தான் என் மண், என் மக்கள் யாத்திரை மேற்கொண்டு வருகிறோம்.

பொய் பேசும் முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இருந்து வருகிறார். அவர் திமுக தேர்தல் வாக்குறுதிகளில் 90 சதவீதம் நிறைவேற்றி உள்ளதாக கூறி வருகிறார். ஆனால், 20 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாம்பழ கூழ் தொழிற்சாலை, பதநீர் மூலம் பனைவெல்லம் தயாரிப்பை ஊக்கப்படுத்தி, வேளாண் கூட்டுறவு சங்க நியாய விலைக்கடைகளில் விற்பனை செய்தல் உட்பட இந்த மாவட்ட மக்களுக்கு அளித்த பல்வேறு வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

தமிழ்நாட்டில் 18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களில் ஐந்தில் ஒருவர் மதுவுக்கு அடிமையாகி உள்ளார். மது குடிப்பதை தடுக்க முடியாது. தமிழகத்தில் கள்ளுக்கடைகள் திறக்க வேண்டும். பாஜக ஆட்சிக்கு வந்தால் 3 ஆண்டுகளில் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்கப்பட்டு, கள்ளுக்கடைகள் திறக்கப்படும். டாஸ்மாக் மூலம் அரசுக்கு ரூ.44 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது. ஆனால், பனை, தென்னையில் 168 மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து, ரூ.1 லட்சம் கோடி அரசுக்கு வருவாய் கிடைக்கும் என பாஜக சார்பில் அறிக்கையை முதல்வர், ஆளுநரிடம் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தமிழக அரசு டாஸ்மாக் நடத்துவது அரசுக்கு வருவாய் கிடைப்பதற்காக இல்லை. திமுகவினரின் நடத்தும் மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் வருவாய் ஈட்ட வேண்டும் என்பதற்காகத் தான். பொங்கல் தொகுப்பாக ஆயிரம் ரூபாய் கொடுக்கும் போது திமுக காலண்டரையும் கொடுத்து விளம்பரம் தேடி வருகின்றனர்” என விமர்சித்தார்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?