பாஜகவுக்கு டாட்டா.. பல வருடங்களுக்கு பின் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி போடும் பிரபல நடிகரின் கட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
8 February 2024, 7:59 pm

பாஜகவுக்கு டாட்டா.. பல வருடங்களுக்கு பின் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி போடும் பிரபல நடிகரின் கட்சி!!

பாராளுமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைக்க அ.தி.மு.க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்கள் இன்று ச.ம.க தலைவர் சரத்குமாரை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பா.ஜ.க கூட்டணியில் ச.ம.க., இடம்பெறும் என்று செய்திகள் வெளிவந்த நிலையில் சமத்துவ மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைக்க அ.தி.மு.க தீவிரம் காட்டி வருகிறது.

ஜெயலலிதா காலத்தில் ஏற்கனவே சமத்துவ மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் 10 ஆண்டுகளுக்கு மேல் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!