மாநிலங்களுக்கான வரி பகிர்வு நிதி.. தமிழகத்தில் வெறும் இத்தனை கோடிகள்தானா? உற்சாகத்தில் உத்தரபிரதேசம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
7 November 2023, 8:42 pm

மாநிலங்களுக்கான வரி பகிர்வு நிதி.. தமிழகத்தில் வெறும் இத்தனை கோடிகள்தானா? உற்சாகத்தில் உத்தரபிரதேசம்!!!

நவம்பர் மாதத்திற்கான வரி பகிர்வாக தமிழகத்திற்கு ரூ.2,976.10 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து மொத்தமாக ரூ.72,961.21 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

அதிகபட்சமாக உத்தர பிரதேச மாநிலத்திற்கு ரூ.13,088.51 கோடி நிதியை மத்திய அரவு விடுவித்துள்ளது. பண்டிகை காலத்தை ஒட்டி 3 நாட்களுக்கு முன்பே வரி பகிர்வு நிதி விடுவிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில், தமிழக அரசுக்கு மத்திய அரசின் நிதி பகிர்வு போதிய அளவு இல்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியிருந்தது நினைவிருக்கலாம்.

இது தொடர்பாக அமைச்சர் சட்டப்பேரவையில் பேசுகையில், நேரடி வரி வருவாயைப் பொறுத்தமட்டில், மத்திய அரசின் நேரடி வரி விதிப்பில் தமிழகத்தின் பங்களிப்பில் தொடர்ந்து நாம் முன்னணியில் இருந்து வருகிறோம்.

இருந்த போதிலும் அந்த பங்களிப்புக்கு நிகரான பகிர்வு கிடைக்கவில்லை. மத்திய அரசுக்கு வரி வருவாயாக தமிழ்நாட்டில் இருந்து செலுத்தக்கூடிய ஒரு ரூபாய்க்கு ஈடாக 29 பைசா மட்டுமே நமக்கு திரும்பக் கிடைக்கிறது. ஆனால், மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக ஆளும் மாநிலத்திற்கு அதிக தொகை விடுவிக்கப்படுகிறது.

உத்தரப்பிரதேசத்தில், அம்மாநிலம் செலுத்தும் வரி ஒரு ரூபாய்க்கு ஈடாக அவர்களுக்கு 2.73 ரூபாய் கிடைக்கிறது. உத்தரபிரதேசம் செலுத்திய வரியைவிட, வரி பகிர்வு 4 மடங்கு அதிகமாக உள்ளது. இதுதான் ஒரு கண்ணில் வெண்ணெய்யும் ஒரு கண்ணிலே வைக்கும் மத்திய அரசின் செயல்பாடாக இருக்கிறது” என்று விமர்சித்து இருந்தார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 425

    0

    0