முத்தம் குடு பிரசன்ட் போடுறேன்: அரசுப்பள்ளி பெண் ஆசிரியையிடம் கரார் காட்டிய ஜொள்ளு ஆசிரியர்…!!

Author: Sudha
9 August 2024, 3:55 pm

உத்திரப் பிரதேசம் உன்னாவோ பகுதியைச் சேர்ந்த ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர் வருகைப் பதிவேட்டில் பெண் ஆசிரியையின் வருகையை பதிவு செய்ய ‘முத்தம்’ கேட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அப்போது அந்த பெண் ஆசிரியை, இந்த நிபந்தனைக்கு தான் சம்மதிக்க மாட்டேன் என்று கூறி பதில் அளித்துள்ளார். அந்த பெண் ஆசிரியை இதற்கு நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்… இது எல்லாம் மோசமான வேலை என்று சொல்வது அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.பதிலுக்கு அந்த ஆசிரியர் சிரித்துக் கொண்டே இருக்கிறார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, வைரலானதை அடுத்து அந்த ஆசிரியரை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும் எனவும் மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொது மக்கள் கருத்து பதிவிட்டுள்ளனர்

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!