தமிழகத்திற்குள் நுழைவதை யாராலும் தடுக்க முடியாது : ஒரு கை பார்ப்பேன்… தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சேலஞ்ச்!!

Author: Babu Lakshmanan
10 March 2023, 3:47 pm

திருச்சி : நான் இரவல் ஆளுனராக பணியாற்றவில்லை என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் என்ஐடியில் நடைபெறும் மகளிர் தின விழாவில் கலந்து கொள்வதற்காக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் விமான மூலம் திருச்சி வந்தார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :- 13 ஆண்டுகள் கழித்து புதுச்சேரியில் முழு பட்ஜெட் தாக்கப்பட்டிருப்பது மிகவும் பெருமையான விஷயம். இதற்காக முதலமைச்சர், நான், நிதித்துறை இணைந்து செயல்பட்டோம். புதுச்சேரி முன்னேறி வருவதற்கு முழு பட்ஜெட் ஒரு நல்ல உதாரணம். இதை அனைவரும் ஒத்துக்கொள்ள வேண்டும்.

புதுச்சேரி ஆளுநர் மீது எந்த விமர்சனமும் வராது. தெலுங்கானா ஆளுநர் மீது வேண்டுமானால் விமர்சனம் வந்திருக்கலாம். புதுச்சேரியின் இரவல் ஆளுனர் தான் புதுச்சேரியில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறோம். நான் இரவல் ஆளுனராக பணியாற்றவில்லை. இரக்கமுள்ள ஆளுநராக பணியாற்றுகிறேன்.

பட்ஜெட் உரையை ஒரு மணி நேரம் முழுவதுமாக படித்ததை தி.மு.க உறுப்பினர்களே பாராட்டினார்கள். அந்த அந்த மாநில பிரச்சனைகளை அந்த அந்த மாநிலத்தவர் பார்த்துக் கொள்ளட்டும். மற்ற மாநில விவகாரங்கள் குறித்து நான் கருத்து கூற முடியாது. தமிழ்நாட்டிற்குள் நான் வருவதை யாரும் தடுக்க முடியாது. தமிழ்நாட்டிற்குள் தமிழிசை வந்து தான் இருப்பேன், எனக் கூறினார்.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!