கிரேன் கம்பி அறுந்து விழுந்து 5 பேர் பலி.. அரசு திட்டப்பணிகளின் போது நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்

Author: Babu Lakshmanan
29 July 2022, 3:59 pm

கிரேன் கம்பி அறுந்து விழுந்த விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் தெலுங்கானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கர்னூல் மாவட்டத்தில் ரெகுமானா கடா பகுதியில் பாலமுரு – ரங்காரெட்டி இடையே பாசன திட்டத்துக்கான கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. சுமார் 100 அடி ஆழமுள்ள சுரங்கப்பாதையில் கேபிள் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக இராட்சச கிரேன் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வழக்கம் போல, நேற்றிரவு கேபிள் பதிக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கும் போது, யாரும் எதிர்பார்க்காத வகையில், திடீரென கிரேன் கம்பி அறுந்து விழுந்தது. இதில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த கொல்லப்பூர் போலீஸ், விபத்து குறித்து ஆய்வு செய்தனர். பாதிக்கப்பட்டவர்கள் 100 அடி ஆழத்தில் இருந்து மீட்கப்பட்டு, உஸ்மானியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், ஆனால் அவர்கள் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியதாகவும் தெரிவித்தனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…