சகோதரரே… கருத்தில் நிதானம் முக்கியம் : சர்ச்சையில் சிக்கிய சீமானுக்கு லிஸ்டு போட்ட தமிமுன் அன்சாரி!

Author: Udayachandran RadhaKrishnan
2 August 2023, 9:59 pm

இஸ்லாத்தையும் கிறிஸ்துவத்தையும் ஏற்றுக்கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று நாம் நினைத்துக்கொண்டு உள்ளோம் ஆனால் அது சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன என அண்மையில் சீமான் பேசியிருந்தார்.

இதற்கு நடிகர் ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான், “இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் அநீதிக்கு எதிராக என்றைக்காவது போராடி உள்ளார்களா? நான் இஸ்லாமியர்களை அவமதித்ததாக கூறி மன்னிப்பு கேட்டால் அவர்கள் எனக்கு ஓட்டு போடுவார்களா? நடிகர் ராஜ்கிரண் இஸ்லாமியர்களுக்காக எத்தனை போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார்? என்று கேள்வி எழுப்பினார்.

சீமானின் இந்த பேச்சு மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் சீமானின் இந்த கருத்துக்கு மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமீமுன் அன்சாரி கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளார்.

“முல்லைபெரியாறு, காவிரி உரிமை, கூடங்குளம், மீத்தேன், NLC, விவசாயிகள், மீனவர்கள் நலன்கள் அனைத்திலும் முன்வரிசையில் நின்றவர்கள் முஸ்லிம்கள். அநீதிக்கு எதிராக போராடியதுண்டா? என கேட்கும் சகோ. சீமான் அவர்களே… கருத்தில் நிதானம் முக்கியம்.” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி