பாமக சார்பில் போட்டியில்லையா…? வெளியான தகவல் ; டக்கென போட்டோவுடன் விளக்கம் கொடுத்த இயக்குநர் தங்கர் பச்சான்..!!

Author: Babu Lakshmanan
22 March 2024, 3:54 pm

பாமக சார்பில் போட்டியிடவில்லை என வெளியான தகவலுக்கு இயக்குநர் தங்கர் பச்சான் X தளம் மூலம் பதிலளித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து பாமக போட்டியிடுகிறது. அந்தக் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், காஞ்சிபுரம் (தனி) தொகுதியை தவிர்த்து எஞ்சிய தொகுதிகளுக்கு வேட்பாளர்கை பாமக தலைமை அறிவித்தது.

அதில், இயக்குநர் தங்கர் பச்சான் கடலூரில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான சில மணிநேரங்களிலேயே, பாமக சார்பில் தங்கர் பச்சான் போட்டியிட மறுத்து விட்டதாக தகவல் வெளியாகின.

இந்த தகவல் வைரலான நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து இயக்குநர் தங்கர் பச்சான் X தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது :- கடலூர் மக்களவை தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் நான், போட்டியிட மறுப்பதாக வெளியான பொய் செய்தியை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறான பொய்ச் செய்தியை வெளியிட்டவர்கள் யார் என கண்டறிந்து, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன், என தெரிவித்துள்ளார்.

அத்துடன், பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் இருக்கும் படத்தையும் அவர் வெளியிட்டு, தான் பாமக சார்பில் கடலூரில் போட்டியிடுவதை உறுதி செய்துள்ளார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 305

    0

    0