சென்னை : தஞ்சை தேர் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கிய 11 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு அரசு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் நேற்று இரவு அப்பர் குருபூஜை விழாவின் போது தேரின் மீது மின்சார உயிரிழந்த கம்பி உரசியதால் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்பில் தலா ரூ.5 லட்சமும், மத்திய அரசின் சார்பில் தலா ரூ.2 லட்சமும் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, அதிமுக, திமுக கட்சிகளும் தங்களின் பங்கிற்கு நிவாரணத்தை அறிவித்துள்ளன.
இதனிடையே, திருவிழாக்காலங்களில் போதிய பாதுகாப்பு வசதிகளை தமிழக அரசு செய்து கொடுக்காததே காரணம் என்று அதிமுக குற்றம்சாட்டி வருகிறது.
இந்த நிலையில், தஞ்சையில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு அரசு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தஞ்சை தேர் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன்.
முறையான பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமல் தேர் திருவிழாவை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்தது ஏன்..? அரசு அதிகாரிகள் மெத்தன போக்கு மற்றும் அலட்சியத்தால் இன்று 11 உயிர்கள் பறிபோய் உள்ளது.
இனிவரும் காலங்களில் இதுபோன்ற விபத்துகள் நடைபெறா வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இரு பக்கமும் இடி என்பது போல மக்களுக்கு ஒருபுறம் மின்வெட்டு, மற்றொருபுறம் மின்சாரத்தால் பலி என்ற நிலை இருக்கிறது, எனக் குறிப்பிட்டுள்ளார்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.