தஞ்சை அருகே திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினின் காலில், மேயர் அங்கியை அணிந்திருந்த தஞ்சை மேயர் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த 26ம் தேதி கும்பகோணம் வந்தார் திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின்.பின்னர், கும்பகோணத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழிகள் வழங்கி கவுரவப்படுத்தினார்.
தொடர்ந்து, அங்கு நடைபெற்ற அறிவாலயத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவை முடித்து கொண்டு தஞ்சைக்கு புறப்பட்டு சென்றார். தஞ்சையில் உள்ள அறிவாலயத்தில் அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் திருவுருப்படத்திற்கு மரியாதை செய்து விட்டு, திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கினர்.
பின்னர், தஞ்சாவூர் மாநகராட்சியில் நவீன தூய்மைப்படுத்தும் வாகனத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற உதயநிதி ஸ்டாலினுக்கு, தாரை தப்பட்டத்துடன் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது, மேயர் அங்கி அணிந்திருந்த ராமநாதன், யாரும் எதிர்பார்க்காத வகையில், சட்டென்று உதயநிதி ஸ்டாலினின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். இது அங்கு கூடியிருந்தவர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. மேயர் காலில் விழும் காட்சிகள் சமூக வளைதலங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
ஏற்கனவே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தொண்டர்கள் காலில் விழுவதை ஒருபோதும் தான் விரும்பவில்லை என்றும், மீறி காலில் விழுந்து வணங்கி, தன்னை மனதளவில் பெரும் நெருக்கடிக்கு ஆளாக்குவதாகவும், அப்போதைய திமுக செயல்தலைவராக இருந்த முதலமைச்சர் ஸ்டாலின் காட்டமான அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
இப்படியிருக்கையில், உதயநிதி ஸ்டாலினின் காலில், மேயர் ஒருவர் விழுந்த சம்பவம் பெரும் விமர்சனத்திற்குள்ளாக்கியுள்ளது.
சுயமரியாதை வழியில் தன்மானம் காக்கும் இயக்கம் என்று கூறிக் கொள்ளும் திமுகவினர், உதயநிதியின் காலில் மேயர் விழுந்ததற்கு என்ன விளக்கம் தரப்போகிறார்கள் என்று எதிர்கட்சியினர் கேள்விகளை தொடுத்து வருகின்றனர்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.