சென்னை : மதமாறச் சொல்லி தொந்தரவு கொடுத்ததால் அரியலூர் விடுதி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
அரியலூர் மாவட்டம் வடுக பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரின் மகள், தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகில் உள்ள மைக்கேல்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் தூய இருதய மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுதியில் தங்கி வகுப்புக்குச் சென்று வந்துள்ளார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 482 மதிப்பெண் பெற்ற மாணவி படிப்பில் சிறந்து விளங்கியுள்ளார்.
இவரின் குடும்ப வறுமையை பயன்படுத்தி கொண்ட பள்ளி நிர்வாகம் மதம் மாற கோரி தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும், படிக்க விடாமல் பள்ளியை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த மாணவி மயக்க மருந்து கொடுத்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து பள்ளியின் விடுதி காப்பாளர் சகாயமேரி கைது செய்யப்பட்டார்.
மாணவியின் மரணத்திற்கு காரணமான கிறிஸ்துவ அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு, பல்வேறு அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, தனது மகளின் தற்கொலை குறித்து சி.பி.சி.ஐ.டி., விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி அவரது தந்தை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி சில உத்தரவுகளை பிறப்பித்தார். அதாவது, இறந்த மாணவியின் உடலை 2வது முறை பிரேத பரிசோதனை செய்ய தேவையில்லை. உடலை மனுதாரர் பெற்று கொண்டு, அவர்களின் வழக்கப்படி அடக்கம் செய்ய வேண்டும். மாணவியின் பெற்றோர் மாஜிஸ்திரேட் முன்பு நாளை ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். விசாரணை அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் வைத்து 24ம் தேதி மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பிறகு மேற்கொண்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும், என தெரிவிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மெட்டாலா பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலானது அமைந்துள்ளது. கோவிலில் இன்று…
நடிகை அமலாபால் மைனா படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. தொடர்ந்து விஜய்,…
டாப் நடிகர் பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆமிர்கான். இவர் தொடக்கத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் உதவி இயக்குனராகவும் தனது…
எம்புரானுக்கு வந்த வம்புகள் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான “L2 எம்புரான்”…
தற்போதைய கால சூழலில் சிறு வயதினருக்கும் மாரடைப்பு ஏற்படுவது சகஜமாக மாறி வருகிறது. இதனால் இளைஞர்கள் பலர் வெளியில் சென்றிருக்கும்…
பிக்பாஸ் தர்ஷன் திடீர் கைது… பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே மிகப் பிரபலமாக அறியப்பட்டவர் தர்ஷன். இலங்கையை…
This website uses cookies.