கப்பு போனது நிம்மதி.. பிரதமரின் விளம்பரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆஸி., கேப்டனுக்கு நன்றி : திமுக பிரமுகர் சர்ச்சை!!

Author: Udayachandran RadhaKrishnan
20 November 2023, 1:22 pm

கப்பு போனது நிம்மதி.. பிரதமரின் விளம்பரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆஸி., கேப்டனுக்கு நன்றி : திமுக பிரமுகர் சர்ச்சை!!

கடந்த அக்டோபர் மாதம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கிய ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று இறுதிப்போட்டியுடன் முடிந்து உள்ளது. உலகக்கோப்பையில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் விளையாடிய இந்திய அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.

டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை ஆஸ்திரேலியா தேர்வு செய்தார் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 240 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது.

அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா டிராவிஸ் ஹெட், லபுஷேனின் அபார ஆட்டத்தால் 43வது ஓவரில் இலக்கை கடந்து வெற்றிபெற்றது.
இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 6 வது முறையாக உலகக்கோப்பை வென்று சாதித்து இருக்கிறது.

உலகக்கோப்பையை இந்திய அணி வெல்லும் என நம்பிக்கையில் இருந்த வீரர்கள், ரசிகர்கள் வேதனையில் கண்ணீர் வடித்தனர். விராட் கோலி, ரோகித் ஷர்மா, முஹம்மது சிராஜ் என அனைத்து இந்திய வீரர்களும் கண்ணீர் வடித்து சோகத்துடனே மைதானத்தை விட்டு வெளியேறினர். இந்திய அணியின் தோல்வி குறித்து பலர் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் திமுக மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி ட்விட்டரில் பதிவிட்டு உள்ளதாவது, “இந்திய வீரர்கள் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடினார்கள் அதிலும் ரோகித்,கோலி, ஷமி என.. தன் தனித் திறமைகளால் மிளிர்ந்தனர் மிக திறமையான அணி இறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்தது வருத்தமாக உள்ளது! ஆனால் ஒரு பக்கம் வேறு உணர்வும் வருகிறது! உலக கோப்பையை இந்தியா வென்று இருந்தால் மோடியின் விளம்பர அரசியலால் உறுதியாக கோப்பை உத்திரபிரதேசம் ராமர் கோவிலுக்கு போயிருக்கும், பாஜகாவின் அரசியல் பிரச்சார மேடைக்கும் வந்து வெற்றிக்கு காரணம் மோடியும், மோடியின் சொந்த ஊரான அஹமதாபாத்தும் தான் என சொல்லி வீரர்களின் திறமை புறம்தள்ளபட்டு மோடியின் வித்தை புகழப்பட்டு இருக்கும்! மோடியின் விளம்பர அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆஸ்திரேலியாவின் ஹெட்க்கும் நன்றி சொல்ல வேண்டும் என்றும் தோனுகிறது. உலகக்கோப்பை போய்விட்டது என்று வருத்தப்படுவதை விட கோப்பையோடயாவது போனதே என நிம்மதி தான் கொள்ள முடிகிறது இந்த நேரத்தில்!!!” என்றார்.

கிரிக்கெட்டிலும் திமுக பிரமுகர் அரசியல் செய்வதாக நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…
  • Close menu