அந்த திமுக எம்பிக்கு இனி சிக்கல்தான்.. அமலாக்கத்துறை எந்த நேரத்திலும் கதவை தட்டும் : அண்ணாமலை கொடுத்த சிக்னல்!

Author: Udayachandran RadhaKrishnan
3 February 2024, 8:22 pm
Quick Share

அந்த திமுக எம்பிக்கு இனி சிக்கல்தான்.. அமலாக்கத்துறை எந்த நேரத்திலும் கதவை தட்டும் : அண்ணாமலை கொடுத்த சிக்னல்!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று மாலை வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பகுதியில் என் மண் என் மக்கள் பாத யாத்திரியை மேற்கொண்டார் இந்த யாத்திரை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

பின்னர் நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில்
இந்த யாத்திரை மாற்றங்களுக்கான யாத்திரை 2019 நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியை தவிர்த்து மற்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.

12 கோடி வீட்டில் கைப்பற்றியதால் தேர்தலில் நிறுத்தப்பட்டது மீண்டும் ஆகஸ்ட் மாதம் 2019 நடைபெற்ற தேர்தலில் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார்

வெற்றி பெற்று என்ன செய்தார் விவசாயிகளை நீண்ட நாட்கள் கோரிக்கையான காவிரி கூட்டு குடிநீர் திட்டம் கால்வாய் சீரமைப்பு மாம்பழத்திற்கான குளிர்சாதன வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாத எம்.பி தான் கதிர் ஆனந்த்.

அமைச்சர் துரைமுருகனின் ஊரான சொந்த பூத்தான கே.வி.குப்பம் காங்க்குப்பம் பகுதியில் கதிர் ஆனந்தை பின்னுக்கு தள்ளி ஏ.சி சண்முகம் லீட் கொடுத்தார்.

அமலாக்கத்துறை உயர் நீதிமன்றத்தில் கூறுகிறது மணல் கொள்ளையில் தமிழக அரசுக்கு ஏற்படும் 4,730 கோடி இழப்பு 4,730 ஒரு குடும்பம் மட்டுமே பணம் சம்பாதிக்கிறது அரசியல் அதிகாரமும் அந்த ஒரு குடும்பத்திற்கு செல்கிறது அமலாக்கத்துறையால் 136 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அமலாக்கத்துறை கதிர் ஆனந்த் வீட்டின் கதவைத் தட்ட வாய்ப்பு என தாக்கி பேசினார்.

நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில், எங்களைப் பொறுத்தவரை 2024 தேர்தலுக்கு தயாராக இருக்கிறோம். கூட்டணி பேச்சு வார்த்தைக்கு இன்னும் காலம் இருக்கிறது.

தமிழகம் பின்தங்கியுள்ளதாக அண்ணாமலை கூறிவரும் கருத்துக்கு தன்னுடன் நேரடியாக விவாதிக்க தயாரா என அமைச்சர் மனோ தங்கராஜ் சவால்விட்டது குறித்து கேட்டதற்க்கு, அவருடன் விவாதிக்க நான் எனது செய்தி தொடர்பாளரை வேண்டுமானால் அனுப்பி வைக்கிறேன். அவரோடு எங்கள் செய்தி தொடர்பாளர் எப்போது வேண்டுமானாலும் வந்து பேச தயார் அதற்கான நேரத்தையும் இடத்தையும் அவர் குறிப்பிடட்டும். வேண்டுமானால் அவர்களது தலைவரான மு க ஸ்டாலினை அனுப்பி வைத்தால் பாரதிய ஜனதா கட்சி தலைவர் என்ற முறையில் நான் நேரடியாக விவாதிக்க தயார்.

இந்திய சரித்திரத்தில் யாராவது ஒரு முதல்வரோ இல்ல பிராந்திய தலைவரோ 10 நாள் டூர் போய் பார்த்திருக்கிறீர்களா. என்ன சொன்னாலும் மக்கள் நம்புவார்கள் என எங்களை முட்டாள்களாக நினைத்துக் கொண்டிருக்கிறது திமுக.

ஸ்பெயினுக்கு சென்று தான் முதலீட்டை இருக்கிறோம் என்று சொன்னால் சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு தோல்வியுற்றதாக ஒப்புக்கொள்கிறார்களா? இந்தியாவின் மிக முக்கியமான ஊழல்வாதிகள் இந்திய கூட்டணியில் தான் உள்ளார்கள்.

திமுகவை பொறுத்த வரை 2024 தேர்தலில் அவர்களின் ஆசை என்பது நிராசையாக இருக்கும். டெல்லி செல்லும் ஆசை திமுகவுக்கு இருந்தால் அது நடக்காது இத்தனை நாட்களாக இருந்த அவர்களுடைய எம்பிக்கள் என்ன செய்தார்கள். 38 எம்பிக்கள் டெல்லியில் என்ன பேசினார்கள் என்பதை வெள்ளை அறிக்கையாக கொடுக்கட்டும்.

ஒவ்வொரு ஊழல் பட்டியலையும் ஒவ்வொரு வகையில் வெளியிட்டு வருகிறோம். இன்னும் ஐந்து ஆடியோ பைல் உள்ளது. ஒவ்வொரு வாரத்திற்கு ஒன்று வெளியிடப்படும்.

திமுகவின் தேர்தல் காக மக்களிடம் கருத்து கேட்கப்படும் இதில் அனைவரும் பங்கேற்கலாம் என திமுக அறிவித்துள்ளது குறித்து கேட்டதற்கு, 2021 தேர்தல் வாக்குறுதி போலயா தற்போது கொடுக்கப் போகிறார்கள் அவர்கள் இதற்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளையே நிறைவேற்ற வில்லை அது குறித்து வெள்ளை அறிக்கை கேட்டும் இதுவரை கொடுக்கவில்லை.

511 தேர்தல் வாக்குறுதி 20 வாக்குறுதி கூட முழுமையாக நிறைவேற்ற வில்லை. கே வி குப்பம் தொகுதியை பொறுத்த வரைக்கும் தேர்தல் வாக்குறுதியை இந்த தொகுதிக்கு திமுக கொடுக்கவில்லை. இந்த முறை தேர்தல் வாக்குறுதி தயாரிப்பதற்கு முன்பு 2021-ல் அடித்த 511 வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை கொடுக்கட்டும். திமுகவின் ட்ராமா எல்லோருக்கும் தெரியும்.

வேலூர் நாடாளுமன்றத்தில் யாருக்கு மக்கள் வாய்ப்பு கொடுக்கவில்லையோ அவர் தான் இன்றைக்கு மக்களுக்காக வேலை செய்து வருகிறார் மக்கள் வாய்ப்பு கொடுத்த எம் பி கதிர் அண்ணன் எந்த பணியையும் செய்யவில்லை.

திமுக துரைமுருகன் கதிர் ஆனந்த் எதுவுமே செய்யாமல் வாயை வைத்து வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

திமுக இளைஞரணி மாநாட்டில் காவாலியா காவலியா பாட்டு போட்டு நடனம் ஆடியது போல் அவர்கள் கனவு உலகத்தில் வாழட்டும். நாங்கள் மக்களோடு நின்று கொண்டிருக்கிறோம். 2024 இல் பார்ப்போம் ஜெயிக்குதா என் மண் என் மக்கள் வெற்றிபெறுதா என்பதை. தேசிய ஜனநாயக கூட்டணியை நாங்கள் உருவாக்கியது கதவு திறந்திருக்கிறது ஜன்னல் திறந்திருக்கிறது யார் வேண்டுமானாலும் வரலாம்.

என்னுடைய என் மண் என் மக்கள் யாத்திரை முடிவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார் அதன் தேதி இன்னும் இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும்.

என்னுடைய 200 வது தொகுதியில் நடைபெறும் பயணத்தின் போது வரும் 11ம் தேதி தேசிய தலைவர் ஜே பி நட்டா சென்னையில் கலந்து கொள்கிறார்.

விஜய் புதியதாக தொடங்கிய தமிழக வெற்றிக்கழகம் பாஜகவின் வீட்டில் என கூறப்படுவது குறித்து கேட்டதற்கு, நாங்கள் இந்திய மக்கள் மற்றும் தமிழக மக்களின் ஏ டீம். யார் யாருக்கு B டீம், சி டீம் என்பது குறித்து எனக்கு தெரியாது.

கே வி குப்பத்தில் நடைபெற்ற என் மண் என் மக்கள் நடை பயணத்தின் போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்

  • sarathkumar latest news நடுரோட்டிற்கு வந்த சரத்குமார்…வைரலாகும் வீடியோவால் பரபரப்பு..
  • Views: - 560

    0

    0