அந்த அமைச்சர் ராஜினாமா செய்யணும்.. அதிமுக போராட்டத்துக்கு ஆதரவு : ஆளுநரை சந்திக்கும் பிரேமலதா!

Author: Udayachandran RadhaKrishnan
27 June 2024, 1:00 pm
prem
Quick Share

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 61 பேரும் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றுள்ளனர். இன்று காலை தொடங்கி உள்ள போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர். இந்நிலையில், அ.தி.மு.க.வினர் தொடங்கியுள்ள உண்ணாவிரத போராட்டத்துக்கு தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். போராட்டத்தில் பங்கேற்றுள்ள எடப்பாடி பழனிசாமியை சந்திந்து பேசிய பிரேமலதா பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், * கள்ளக்குறிச்சியில் நடந்தது சாதாரண விஷயமா? இது குறித்து சட்டசபையில் விவாதிக்க வேண்டாமா? * இந்த போராட்டம் இதோடு முடிந்து விடாது.

நாளை கவர்னரை சந்தித்து தே.மு.தி.க. சார்பில் மனு அளிக்க உள்ளோம். கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். சி.பி.ஐ. விசாரித்தால் தான் உண்மை வெளியே வரும். கள்ளச்சாராய சம்பவத்திற்கு பொறுப்பேற்று அமைச்சர் முத்துசாமி ராஜினாமா செய்ய வேண்டும். அ.தி.மு.க.வுக்கு விளம்பரம் தேட வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றார்.

Views: - 128

0

0