கட்சிக்கு விஸ்வாசம் இல்லாதவர் அந்த எம்எல்ஏ.. 4 கால்களை உடைத்தால் தமிழக அரசியல் ஆடிவிடும் : அண்ணாமலை பேச்சு!
Author: Udayachandran RadhaKrishnan9 February 2024, 10:47 am
கட்சிக்கு விஸ்வாசம் இல்லாதவர் அந்த எம்எல்ஏ.. 4 கால்களை உடைத்தால் தமிழக அரசியல் ஆடிடிடும் : அண்ணாமலை பேச்சு!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் என் மண் என் மக்கள் என்ற பாதயாத்திரை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு சுமார் 9:30 மணி அளவில் ஸ்ரீபெரும்புதூர் தேரடியில் இருந்து பஸ் நிலையம் வரை சாலையின் இருபுறமும் நின்று கொண்டிருந்த பொதுமக்களை சந்தித்து கைகுலுக்கி அவர்கள் செலுத்தும் பொன்னாடை, மாலை, புத்தகம் என மரியாதைகளை பெற்றுக் கொண்டு மக்கள் வெள்ளத்தில் மிதந்தபடி உற்சாகமாக வருகை தந்தார்.
அங்கு கூடியிருந்த திரளான மக்கள் மத்தியில் பேசுகின்றன போது, வருகின்ற 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும் தமிழகத்தின் அரசியல் நான்கு கால்களை நம்பி இருக்கிறது. லஞ்ச ஊழல், குடும்ப ஆட்சி, ஜாதி அரசியல், அடாவடித்தனம் இந்த நான்கு கால்களை நம்பித்தான் நாற்காலியில் முதலமைச்சர் அமர்ந்திருக்கிறார். நான்கு கால்களை உடைத்தால் தான் உண்மையான அரசாட்சியை தமிழக மக்கள் பார்க்கலாம் என்றார்.
அதேபோல் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினராக உள்ள செல்வபெருந்தகை, புரட்சி பாரதம் கட்சியில் இருந்து, புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள், பகுஜன் சமாஜ்வாதி, கட்சி போன்றவற்றுக்கு தாவித்தாவி வருகின்றவர்.
பகுஜன் சமாஜ்வாதி கட்சியில் இருந்தபோதுதான் கட்சி விரோத நடவடிக்கைக்காக நீக்கப்பட்டார். உடனே ஐந்தாவது கட்சியாக திமுகவில் சேர பார்த்தார். திமுகவில் சேர்க்கவில்லை என்பதற்காக காங்கிரஸில் சேர்ந்தார். இதுதான் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகையின் இலட்சணம் என கடுமையாக தாக்கினார்.
திமுக காரர்கள் ஸ்டாலினுடைய புகழ்களை புகழ்கிறார்களோ இல்லையோ, செல்வபெருந்தகையை புகழ்வது பார்க்கும்போது 23ம் புலிகேசி படம் பார்த்த ஞாபகம் வருகின்றது என்றார்.
டி ஆர் பாலு அவர்கள் இரண்டு முறை ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். ஏன் சொந்த ஊரான தஞ்சாவூர் மன்னார்குடியில் போட்டியிடவில்லை. டி ஆர் பாலு மன்னார்குடியில் போட்டியிட்டால் டெபாசிட் கூட வாங்க மாட்டார் என சாடினார்.