வெளியேறும் ‘அந்த’ கட்சி… இபிஎஸ் போட்ட பிளான் : விரைவில் வெளியாகும் மாஸ் கூட்டணி அறிவிப்பு?!!
Author: Udayachandran RadhaKrishnan27 July 2023, 4:23 pm
நாடாளுமன்றத் தேர்தல் களத்தின் முதல்கட்டமாக, திருச்சியில், டெல்டா மாவட்டங்களின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சிப் பாசறைக் கூட்டம் கூட திமுக சார்பாக நேற்று நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் வாக்குச்சாவடி முகவர்களுக்கு பல்வேறு முக்கிய அசைன்மெண்டுகளை கொடுத்தார்.
இன்னொரு பக்கம் அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆன பின் தற்போது லோக்சபா தேர்தலுக்காக எடப்பாடி பழனிசாமி தயாராகி வருகிறார். மாவட்டம் வாரியாக தேர்தல் பணிகளை எடப்பாடி பழனிசாமி முடுக்கிவிட்டுள்ளார்.
அதிமுகவின் உட்கட்சி மோதலும் கிட்டத்தட்ட முடிவிற்கு வந்துவிட்டது. லோக்சபா தேர்தலுக்கு அதிமுகவினரை தயார்படுத்தும் விதமாக மதுரையில் அதிமுக பொதுக்கூட்டத்தை நடத்த எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பொதுக்கூட்டத்தை அவர் மதுரையில் நடத்தவும் முக்கியமான ஒரு காரணம் உள்ளதாம். எடப்பாடி என்றால் கொங்கு மண்டல தலைவர் என்ற இமேஜ் இருக்கிறது. அதை உடைக்க எடப்பாடி நினைக்கிறாராம்.
முக்குலத்தோர் அபிமானத்தை பெறும் விதமாக மதுரையில் எடப்பாடி கூட்டத்தை நடத்த உள்ளார் என்கிறார்கள். ஓ பன்னீர்செல்வம் காரணமாக முக்குலத்தோர் அப்செட் ஆக கூடாது என்பதற்காக இந்த கூட்டத்தை அவர் நடத்த வாய்ப்பு உள்ளது.
அதோடு முக்கியமாக பிரதமர் மோடியை இந்த கூட்டத்தில் மேடை ஏற்ற எடப்பாடி முடிவு செய்துள்ளாராம். அதோடு கூட்டணி கட்சி தலைவர்கள் 10 பேரை மேடைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளாராம்.
எடப்பாடி பழனிசாமி திட்டம்: இந்த நிலையில் லோக்சபா தேர்தலுக்காக எடப்பாடி பழனிசாமி கொஞ்சம் கொஞ்சமாக தயாராக தொடங்கி உள்ளாராம். அதன்படி எடப்பாடி பழனிசாமி திமுக கூட்டணியில் இருக்கும் முக்கியமான ஒரு கட்சியை தூக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறாராம்.
அதாவது தற்போது திமுகவை நோக்கி ஒரு கட்சி சென்று கொண்டு இருக்கிறது. அந்த கட்சி திமுக கூட்டணியில் இணையும் வாய்ப்புகள் உள்ளன. திமுக கூட்டணியில் அந்த கட்சி இணையும் பட்சத்தில், திமுக கூட்டணியில் இருக்கும் வேறு ஒரு கட்சி திமுகவில் இருந்து அதிமுக கூட்டணிக்கு வெளியேற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி ஏற்கனவே திமுகவிற்கும் அந்த கட்சிக்கும் இடையில் கடந்த சில மாதங்களாக சில விஷயங்களில் கொள்கை முரண் உள்ளது. இந்த கொள்கை முரண் காரணமாக இருக்கும் கருத்து வேறுபாட்டை பயன்படுத்தி அந்த கட்சியை தங்கள் கூட்டணியை நோக்கி தூக்குவதற்கான பணிகளை எடப்பாடி பழனிசாமி செய்து வருவதாக கூறப்படுகிறது. திமுகவின் கூட்டணியில் மாற்றம் ஏற்படும் பட்சத்தில் தமிழ்நாட்டின் தேர்தல் மற்றும் அரசியல் சூழ்நிலைகளும் மாறும் வாய்ப்புகள் உள்ளது.