விண்ணை பிளந்த பாரத் மாதா கி கோஷம்… பிரதமரை வரவேற்க கூட்டத்தோடு கூட்டமாக அண்ணாமலை செய்த செயல்!!
Author: Udayachandran RadhaKrishnan11 November 2022, 9:44 pm
திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில் உள்ள காந்தி கிராமிய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. காந்திகிராம நிறுவனத்தின் பவள விழாவும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்து அங்கிருந்து திண்டுக்கல்லுக்கு ஹெலிகாப்டரில் வருகை தந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரைக்கு ஹெலிகாப்டரில் வருகை தந்து அங்கிருந்து கார் மூலம் பல்கலைக்கழகம் சென்றார். அங்கிருந்து கார் மூலம் காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்தார்.
முதல்வர் மு.க ஸ்டாலினும் அதே வழியாக காந்திகிராம் கிராமிய பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்தார். பிரதமர் மற்றும் முதல்வரை வரவேற்பதற்காக இன்று காலை முதலே காந்தி கிராம் பல்கலைகத்திற்கு எதிரே உள்ள சாலையில் பாஜக மற்றும் திமுகவினர், பொதுமக்கள் குவிந்து இருந்தனர்.
பிரதமர் மோடியை வரவேற்க பாஜக நிர்வாகிகளும் அதிக அளவில் வந்த வண்ணம் இருந்தனர். இதனால், எங்கு திரும்பினாலும் தொண்டர்கள் கூட்டமாக இருந்தது. ஒருபக்கம் முதல்வர் ஸ்டாலினை வரவேற்க திமுகவினரும் குவிந்து இருந்தனர். பிரதமரைக் காண பொதுமக்களும் வந்திருந்தனர். இப்படி திரும்பிய பக்கம் எல்லாம் கூட்டமாக இருந்தது.
முன்னதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் பிரதமரை வரவேற்பதற்காக தனது காரில் வந்து இறங்கினர். அண்ணாமலையை பார்த்ததும் அங்கிருந்த பாஜக தொண்டர்கள் ஆர்வ மிகுதியில் திரண்டனர். அண்ணாமலையை சுற்றிவளைத்த தொண்டர்கள் அவருடன் செல்பி எடுப்பதிலும் கை குலுக்குவதிலும் ஆர்வம் காட்டினர். இதனால், அண்ணாமலை தொண்டர்கள் கூட்டத்திற்குள் சிக்கிக் கொண்டார்.
பாரத் மாதா கி என்ற கோஷமும் எழுப்பிய தொண்டர்கள் அண்ணாமலையை நோக்கி முண்டியடித்தனர். இதனால், அண்ணாமலை தொண்டர்கள் கூட்டத்திற்குள் சிக்கியபடி மெதுவாக செல்ல நேர்ந்தது. பாஜக தலைவர் அண்ணாமலையுடன் செல்பி எடுக்க தொண்டர்கள் சுற்றி வளைத்தது அங்கு சிறிது நேரத்தை பரபரப்பை ஏற்படுத்தியது. தொண்டர்களுக்கு போஸ் கொடுத்தபடியே அண்ணாமலை அங்கிருந்து நடந்து சென்று பிரதமரை வரவேற்க சென்று விட்டார்.