ஜனநாயகத்திற்கு எதிரான கட்சி இந்த ரெண்டும் தான் : ராகுல் காந்தி குறிப்பிட்டு சொன்ன கட்சி.. அதிர்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 October 2022, 6:05 pm

2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிக்காக போராடி வரும் காங்கிரஸ் கட்சி, தற்போது ராகுல்காந்தி தலைமையில் ஒற்றுமை யாத்திரை என்னும் தலைப்பில் நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

மூன்றாவது முறையாக தேர்தலில் வெற்றி வாகைசூட பாஜக சார்பாக பிரதமர் மோடியும் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறார்.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெலுங்கானா மாநிலத்தில் ஒற்றுமை யாத்திரை பயணம் மேற்கொண்டு வருகிறார்.

நடை பயணத்தின்போது ராகுல் காந்தி பேசியதாவது:- மாநிலத்திலும் மத்தியிலும் டி.ஆர்.எஸ். (ராஷ்டிர சமிதி கட்சி) மற்றும் பா.ஜ.க. இணைந்து செயல்படுகிறது.

டி.ஆர்.எஸ். மற்றும் பா.ஜ.க. அரசுகளின் கொள்கைகளால் வேலையின்மை மற்றும் பணவீக்கம் அதிகரித்துள்ளது. டெல்லியில் டி.ஆர்.எஸ். பா.ஜ.க.வுக்கு உதவுகிறது, மேலும் மாநிலத்தில் டி.ஆர்.எஸ்.ஸுக்கு பா.ஜ.க. ஆதரவளிக்கிறது. இந்த 2 கட்சிகளும் ஜனநாயகத்திற்கு எதிரானவை.

டி.ஆர்.எஸ் மற்றும் பா.ஜ.க ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். தெலுங்கானா மக்கள் எம்எல்ஏக்கள் விலைக்கு வாங்க பேரம் பேசப்படும் நிகழ்வை புரிந்து கொள்ள வேண்டும் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்திய அனைத்து மசோதாக்களையும் டிஆர்எஸ் முழுமையாக ஆதரித்தது.

சட்டப்பேரவையில் காங்கிரஸ் கொண்டு வந்த தீர்மானத்தை டிஆர்எஸ் ஆதரிக்கவில்லை. நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்த மாநிலம் டிஆர்எஸ் தலைமையிலான தெலுங்கானாதான்.

ஆட்சியைக் கவிழ்க்க இரு கட்சிகளும் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதால், டிஆர்எஸ் மற்றும் பா.ஜ.க. ஒன்றுக்கொன்று வேறுபட்டதல்ல என அவர் கூறியுள்ளார்.

ராகுலின் இந்த பேச்சு அண்ணா அறிவாலயத்தை அதிர்ச்சியடை வைத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

காரணம் டிஆர்எஸ், திரிணாமூல் கட்சியுடன் நல்ல வலுவான உறவை வைத்துள்ள திமுக, தனது தோழமை கட்சியான காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி டிஆர்எஸ் குறித்து பேசியுள்ளது முதலமைச்சர் ஸ்டாலின் சற்று அதிர வைத்துள்ளது.

2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிரணிகள் ஒன்று சேர வேண்டும் என வலியுறுத்து வரும் ஸ்டாலின், டிஆர்எஸ், காங்கிரஸ், திரிணாமுல் கட்சிகளை இணைக்கவும் யோசித்துள்ளார். அப்படி அது நடக்க வில்லை என்றால், காங்கிரசை கழட்டிவிடவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்டாலினுடன் கைக்கோர்க்க தெலுங்கானா முதலமைச்சரும், மேற்கு வங்க முதலமைச்சர் விருப்பம் தெரிவித்த நிலையில், தமிழக ஆட்சியில் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி, டிஆர்எஸ் கட்சியை விமர்சித்துள்ளது திமுக – காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட வாய்ப்பும் உள்ளதென்றும், இன்னும் ஒரு வருடத்தில் முடிவு தெரிந்து விடும் என அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

  • kamal haasan not giving handshake to writer charu niveditha பொது வெளியில் அசிங்கப்படுத்திய கமல்ஹாசன்; ஒருத்தரை இப்படியா அவமானப்படுத்தனும்? அடப்பாவமே