தமிழகத்தை உலுக்கிய வங்கிக் கொள்ளை வழக்கு : துப்பு துலங்கியது… வசமாக சிக்கிய கோவை நகைக்கடை உரிமையாளர்.. பகீர் பின்னணி!!

Author: Udayachandran RadhaKrishnan
16 August 2022, 10:15 am

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கி கிளையில் பட்டப்பகலில் காவலாளிக்கு குளிர்பானம் கொடுத்தும், ஊழியர்களை கட்டிப்போட்டும் 32 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வங்கியின் சார்பில் பொது மக்களிடம் இருந்து அடமானமாக பெற்றிருந்த நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. இதனால் வங்கி கிளை முன்பு வாடிக்கையாளர்கள் திரண்டனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக அரும்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் இதே வங்கியின் இன்னொரு கிளையில் மண்டல மேலாளராக பணியாற்றிய முருகன் என்பவர் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து முருகனின் செல்போன் எண்ணை வைத்து துப்புதுலங்கும் பணியில் போலீசார் தீவிரம் காட்டினர்.
போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் அண்ணாநகர் துணை கமிஷனர் விஜயகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார் முருகனையும் அவரது கூட்டாளிகளையும் பிடிக்க வலை விரித்தனர்.

இதில் முருகனுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சந்தோஷ், பாலாஜி, சக்திவேல் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 20 கிலோ நகைகள் மீட்கப்பட்டன. பெடரல் வங்கியில் கொள்ளை அடிக்கப்பட்ட 32 கிலோ நகைகளில் இவர்கள் 3 பேரும் 20 கிலோ நகைகளை பங்கு போட்டு பிரித்து எடுத்துக் கொண்டது தெரியவந்துள்ளது.

இதில் தற்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார. பாலாஜி, சந்தோஷ், முருகன் உள்ளிட்ட 3 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர். தற்போது சூர்யா என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் வங்கி கொள்ளை தொடர்பாக கோவையில் உள்ள நகைக்கடை உரிமையாளரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட ஒருசிலர் கோவையில் நகையை விற்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தியதாக கிடைத்த தகவலால் கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் உரிமையாளர் ஸ்ரீ வஸ்தவ்யிடம் விசாரணை நடந்து வருகிறது என கூறப்படுகிறது

  • thalapathy 69 is telugu movie remake தெலுங்கு பட ரீமேக்தான் தளபதி 69 கதை… இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலா..!!
  • Views: - 505

    0

    0