பஞ்சுமிட்டாய்க்கு தடை விதித்தது மட்டுமே திமுக அரசு செய்த மிகப்பெரிய சாதனை : செல்லூர் ராஜூ விமர்சனம்!

Author: Udayachandran RadhaKrishnan
26 February 2024, 11:56 am

பஞ்சுமிட்டாய்க்கு தடை விதித்தது மட்டுமே திமுக அரசு செய்த மிகப்பெரிய சாதனை : செல்லூர் ராஜூ விமர்சனம்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாளை யொட்டி மதுரை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் மத்திய சட்டமன்றத் தொகுதிக்கான பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது.

அப்போது பேசியவர் தமிழக பெண்களுக்காகவே வாழ்ந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 10 மொழி தெரிந்த ஒரே முதல்வர் ஜெயலலிதா மட்டுமே.

மதுக்கடையை முதன்முதலாக கொண்டு வந்தவர் கலைஞர் கருணாநிதிதான். கனிமொழி இளம் விதவைகள் உருவாவதற்கு காரணம் மது கடைகள் தான் என்று சொன்னார் இப்பொழுது அவர்கள் ஆட்சி நடைபெற்ற வருகிறது மதுக்கடைகளை மூடிவிட்டார்களா.

பெண் சிசுக் கொலையை தடுத்து நிறுத்திய பெருமை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாக்கு மட்டுமே சேரும் பெண்களுக்காக பெரிதும் உழைத்தவர் ஜெயலலிதா மட்டுமே

பெண்களுக்கான பல திட்டங்களை கொடுத்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. நீட் தேர்வு தமிழகத்தில் இருந்து வருவதற்கான முக்கிய காரணம் திமுக மட்டுமே. முல்லைப் பெரியாறு அணையை உயர்த்தி காட்டியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

போன ஆண்டு சட்டமன்றத்தில் என்ன விதமான நிதிநிலை அறிக்கையை கொடுத்தார்களோ அதே நிதி நிலை அறிக்கையை இந்த முறையும் கொடுத்துள்ளார்கள் எந்தவித வளர்ச்சிப் பணிகளும் எந்த வித திட்டங்களும் இல்லை என்பது மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

தமிழகத்தின் மீது கடன் மீது கடன் வாங்கி கடன் மாநிலமாக மாற்றி விட்டார்கள் தமிழகத்தை வறண்ட மாநிலமாக மாற்றிய பெருமை திமுகவிற்கு சேரும்.

ஆயிரம் ரூபாய் மகளிர்க்கு வழங்குவோம் என்று சொல்லுகிற தமிழக அரசு திருமண நிதி 25,000 ஐ நிறுத்திய உள்ளது வேதனை அளிக்கிறது.

திமுகவிற்கு இனிமேல் பொதுமக்கள் வாக்களிக்க மாட்டார்கள் இனிவரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவை ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என பொதுமக்களிடம் கோரிக்கை வைத்தார்.

காய்கறி உள்ளிட்ட அனைத்து விலைவாசி பொருட்களும் வெளியேற்றத்தை கண்டுள்ளது தான் திமுகவின் அரசின் சாதனை. திமுகவில் மிக மலிவாக கிடைப்பது கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மட்டும் தான் இதனால் தமிழகத்தில் வன்முறை நிலவி வருகிறது

வரி உயர்வு தமிழகத்தில் அதிகமாக உள்ள காரணத்தினால் கேரளா அண்டை மாநிலங்களில் பெரோல் டீசல் விலைகுறைவாக உள்ளது.இதனால் தமிழகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது

இந்த ஆட்சியின் பெரிய சாதனை பஞ்சுமிட்டாயிக்கு தடை விதித்தது மட்டுமே வேறு எந்த விதமான சாதனையும் திமுக அரசு செய்யவில்லை

  • Ethirneechal 2 cast updates விஜய் டிவியில் இருந்து சன் டிவி-க்கு தாவிய நடிகை…அப்போ எதிர்நீச்சல் 2 வில்லி இவுங்க தானா..!
  • Views: - 221

    0

    0