வீட்டின் முன் நிறுத்தியிருந்த டூவீலர் அபேஸ்…லாவகமாக திருடிச் சென்ற சிறுவனின் சிசிடிவி காட்சிகள்: காரமடையில் அதிர்ச்சி..!!

Author: Rajesh
18 May 2022, 8:46 am

கோவை: காரமடையில் பூ வியாபாரியின் மோட்டார் சைக்கிளை சிறுவன் ஒருவன் லாவகமாக திருடிச்செல்லும் சிசிடிவி காட்சியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள கண்ணார்பாளையம் to மத்தம்பாளையம் செல்லும் சாலையில் தெற்கு தோட்டம் என்ற பகுதியில் வசித்து வருபவர் மோகன் ராஜ். இவர் கோவை பூ மார்கெட் பகுதியில் பூ மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.

இவர் தனது வீட்டின் முன் எக்ஸ்எல் சூப்பர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு செல்வது வழக்கம். இதேபோல் நேற்றிரவும் பணி முடிந்து வீட்டிற்கு வந்த அவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி வீட்டிற்குள் சென்று உறங்கியுள்ளார். இதனையடுத்து, இன்று காலையில் எழுந்து வீட்டை விட்டு வெளியே வந்தவர் தனது மோட்டார் சைக்கிள் திருடு போனது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.இதனால் அருகில் உள்ள வீட்டின் சிசிடிவி காட்சிகளை சோதனையிட்டுள்ளார்.

அப்போது,ஒரு சிறுவன் இன்று அதிகாலை 01.40 மணியளவில் அத்தெருவில் நுழைந்து மோகன்ராஜின் மோட்டார் சைக்கிளை அசைத்து பார்த்து பெட்ரோல் உள்ளதை உறுதி செய்து விட்டு சைடு லாக்கரை உடைத்து லாவகமாக சப்தமில்லாமல் மோட்டார் சைக்கிளை திருடிச்செல்வது தெரியவந்தது. இதனையடுத்து மோகன்ராஜ் தனது மோட்டார் சைக்கிள் காணாமல் போனது குறித்து சிசிடிவி காட்சியுடன் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காரமடை போலீசார் மோட்டார் சைக்கிளை திருடிய சிறுவனை வலைவீசி தேடி வருகின்றனர்.அதிகாலை வேளையில் சப்தமில்லாமல் வந்து பெட்ரோல் இருப்பதை உறுதி செய்து விட்டு மோட்டார் சைக்கிளை லாவகமாக திருடிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்