இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் அப்துல் ரஹீம் அறிவித்துள்ள பூணூல் அறுப்பு போராட்டத்திற்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு பிராமண சமாஜத்தின் தலைவர் நா. ஹரிஹரமுத்து ஐயர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் அப்துல் ரஹீம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் “காஞ்சி சங்கர மடத்தில் இருந்து கோட்சேவின் வாரிசுகள் அணியும் பூணூல் அறுப்பு போராட்டம் தொடர்வோம்” என்று தெரிவித்துள்ளதை வன்மையான கண்டிக்கிறோம்.
தற்போது பள்ளிகளில் எழுந்துள்ள ஹிஜாப் அணிதல் விவகாரம் கர்நாடக மாநிலத்தில் எழுந்ததாகும். தமிழ்நாட்டில் இத்தகைய சூழல் இல்லை. அவ்விவகாரம் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இவ்விவகாரம் பள்ளி, மாணவ மாணவிகள் மற்றும் மாநில அரசு தொடர்புடையதே இன்றி எந்த ஒரு சமூகத்திற்கு தொடர்புடையது அல்ல.
இவ்விவகாரத்திற்கு எவ்விதத்திலும் சம்பந்தம் இல்லாத பிராமணர்களையும் இந்து சமுதாயத்தை சேர்ந்த பூணூல் அணியும் மற்றவர்களையும் குறிவைத்து தாக்குவோம் என்று அரைகூவலாக சொல்லுவதை கண்டிகிறோம். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் இரு வேறு பிரிவுகளுக்கு இடையே விரோத உணர்ச்சிகளை தூண்டும் விதத்திலும் அறிக்கைகள் வெளியிடுவோர்கள் மீது சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசையும், தமிழக அரசையும் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் போற்றுதற்குரிய காஞ்சி சங்கராசார்யருக்கும். சங்கர மடத்திற்கும். பூணூல் அணிவோர்களுக்கும் அவர்தம் நிறுவனங்களுக்கும் போதிய பாதிகாப்பு அளிக்குமாறு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை வேண்டி கேட்டுக்கொள்கிறோம்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பின்னர், அறிவிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் சிவக்குமார் ஜெயபாலன். இதையும்…
கேஜிஎஃப் கதாநாயகி யாஷ் நடித்த “கேஜிஎஃப்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே…
This website uses cookies.