உதயநிதியை துணை முதல்வராக்க முதலமைச்சர் ஸ்டாலின் நடத்தும் பில்டப் திருவிழா.. அண்ணாமலை கடும் விமர்சனம்!!

உதயநிதியை துணை முதல்வராக்க முதலமைச்சர் ஸ்டாலின் நடத்தும் பில்டப் திருவிழா.. அண்ணாமலை கடும் விமர்சனம்!!

சென்னை சோழிங்கநல்லூரில் பாஜக செயல்வீரர்கள் கூட்டம் அண்ணாமலை தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, இங்கிருப்பவர்களுக்கு அடிப்படை விஷயத்தை கூட படிக்கவும் மற்றும் விவரிக்கவும் தெரியவில்லை.

அதிகாரிகள் ஒரு விஷயத்தை சொன்னால், அதைக் கேட்டு ஒரு உத்தரவு பிறப்பிப்பதற்கான திறமை இல்லை. அந்த வகையில், முதல்வர் ஸ்டாலினுக்கும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் ஒரு 4 விஷயங்களை கூறினால், அதை கேட்டு நடவடிக்கை எடுக்க திறமை இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என கேள்வி எழுப்பினார்.

இதனால், தமிழகத்தில் குடும்ப ஆட்சி என்பது மொத்தமாக சீரழித்துள்ளது. சிஸ்டம் முழுவதும் கெட்டுப்போய் உள்ளது. மாநிலத்தின் ஆட்சியில் இருந்து ஆரம்பித்து, மேயர் ஆட்சி வரை ஒட்டுமொத்தமாக சிஸ்டத்தை கெடுத்து இன்று தமிழகத்தை குட்டிச்சுவராக்கி வைத்துள்ளனர்.

தென் தமிழகத்தில் கனமழை பெய்தபோது, திருநெல்வேலி மேயர் சேலத்தில் நடைபெற இருக்கும் திமுக இளைஞரணி மாநாட்டுக்கு பந்தல் போட்டுக் கொண்டிருந்தார்.

திருநெல்வேலியில் மழை பெய்தது. ஆனால், மேயர் அங்கு இல்லை. மழை பாதிப்புகளை பார்வையிட உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவும், அமைச்சர் துரைமுருகனும் தான் செல்ல வேண்டும்.

ஆனால், அங்கு சென்று யார் பார்த்தது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். எனவே, முதலமைச்சரை பொறுத்தவரை தெளிவாக இருக்கிறார். சேலம் இளைஞரணி மாநாடு முடிந்த பின்போ அல்லது நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்போ, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக ஆக்குவதற்கான ஒத்திகை தான் தற்போது நடக்கும் நிகழ்வுகள்.

பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி போட்டோ எடுத்துக் கொள்கின்றனர். கோட் சூட் அணிந்தபடி இருக்கும் காட்சிகள் தொலைக்காட்சியில் வரவேண்டும் என எண்ணி கொண்டிருக்கிறார்கள்.

உதயநிதி ஸ்டாலின் அறிவாளி ஆகிவிட்டார் என்பது போல தமிழக மக்களுக்கு கொஞ்சம் கொஞ்சம் காட்டுகிறார்கள். அதாவது, எப்படி தமிழ் சினிமாவில் பல்வேறு வகையில் ஹீரோவை அறிமுகப்படுத்துவார்களோ அதுபோல தான், உதயநிதி ஸ்டாலினுக்கான தற்போது பில்டப் திருவிழா நடந்துகொண்டிருக்கிறது.

முதலமைச்சரின் கவனம் ஆட்சியில் இல்லை, எப்படி தன் மகனை துணை முதல்வராக கொண்டுவந்து முதல்வராக்குவது என்பதில் தான் உள்ளது. திமுகவை பொறுத்தவரை எளிதாக முடிவு எடுக்க முடியவில்லை.

ஆனால், அறிவாலயத்தில் ஒரு நிமிடத்தில் முடிவெடுத்து, அதை தொண்டர்களுக்கு இரண்டு நிமிடத்தில் சொல்லி, தொண்டர்கள் அதை மூன்று நிமிடங்களில் ஏற்றுக்கொள்வார்கள்.

இப்படித்தான் அறிவாலயத்தில் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. காரணம், இங்கு ஒரு குடும்பம் மட்டும் ஆட்சியில் இருக்கிறது. ஆனால், பாஜகவை பொறுத்தவரை அவ்வாறு இல்லை. ஜனநாயக கட்சியாக இருப்பது பாஜக மட்டும் தான்.

சின்ன சின்ன விஷயங்களில் கூட ஜனநாயகத்தை வளர்த்து கட்சியை வளர்ப்பதுதான் பாஜகவின் அழகே. முழுமையாக ஒரு ஜனநாயகம் இருக்கும் கட்சி பாஜகதான். அதனால், கட்சியிலும் இயற்கையாகவே பிரச்சினைகள் அதிகமாகத்தான் இருக்கும். என்னால் கட்டளையிட முடியாது. நானும் இந்த கட்சியில் ஒரு தொண்டன், ஒரு சேவகன். பாஜகவைப் பொருத்தவரை தலைவர், அமைச்சர், தொண்டர்கள் எல்லோரும் சமம் தான் என்று பேசினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சமந்தாவின் மூன்றாவது காதலர்? விரைவில் டும் டும் டும்! அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சி கொடுக்குறாரே?

தென்னிந்தியாவின் டாப் நடிகை நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவரது…

3 minutes ago

இளம்பெண் கொடூர கொலை… நள்ளிரவில் சரணடைந்த குற்றவாளி : கோவையில் பகீர்!

கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி…

49 minutes ago

எனக்கே கம்பி நீட்டிட்டாங்க, நான் பட்ட பாடு இருக்கே- புலம்பித் தள்ளிய வடிவேலு

வடிவேலுவின் கம்பேக் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் வடிவேலு. அந்த சமயத்தில் திமுகவை எதிர்த்து…

1 hour ago

40 வருடம் சிறை தண்டனை… நீதிமன்றம் போட்ட அதிரடி தீர்ப்பு!

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…

2 hours ago

சோடி போட்டு பாப்போமா சோடி- ரீரிலீஸிலும் அஜித்தை முட்டி மோதும் விஜய்? இவ்வளவு கலெக்சனா?

சச்சின் ரீரிலீஸ் 2005 ஆம் ஆண்டு விஜய் கதாநாயகனாக நடித்து வெளியான “சச்சின்” திரைப்படம் கடந்த 18 ஆம் தேதி…

2 hours ago

This website uses cookies.